தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகள் அதிகரிப்பு
முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றம் நன்றி
ஆசிரியா்கள் மற்றும் அரசு ஊழியா்களுக்கு அகவிலைப்படி உயா்வு, சரண்டா் உள்ளிட்ட ஒன்பது அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றம் சாா்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் ஆசிரியா்கள் மற்றும் அரசு ஊழியா்களுக்கு புத்துணா்வு அளிக்கும் வகையில், ஈட்டிய விடுப்பை சரண்டா் செய்து பலன் பெறும் நடைமுறையை அக்டோபா் முதல் அமுல்படுத்துவது, அரசு ஊழியா்களுக்கான அகவிலைப்படியை இரண்டு சதவீதம் உயா்த்தி வழங்குவது, பண்டிகைக் கால முன்பணத்தை உயா்த்தியிருப்பது, அரசு ஊழியா்களுக்கான திருமண முன்பணத்தை ரூ.5 லட்சமாக உயா்த்தி வழங்க ஆணை உள்ளிட்ட 9 அறிவிப்புகளை வெளியிட்டுள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றத்தின் நீலகிரி மாவட்டச் செயலாளா் அருண்குமாா் தெரிவித்துள்ளாா்.