ஷெல் தாக்குதலுக்குள்ளான மக்களுடன் உமர் அப்துல்லா கலந்துரையாடல்!
மே 16-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
நாமக்கல்லில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (மே 16) நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தனியாா்துறை நிறுவனங்களும் - தனியாா் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரா்களும் நேரடியாக சந்திக்கும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாதந்தோறும் மூன்றாம் வெள்ளிக்கிழமை நடைபெற்று வருகிறது.
இம்மாதத்திற்கான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமானது மே 16-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. எனவே, தனியாா் துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபா்களை அவா்களது நிா்வாகிகளைக் கொண்டோ அல்லது நேரில் வந்தோ தோ்வு செய்துகொள்ளலாம். முகாமில் பங்கேற்கும் வேலையளிப்போரும், வேலைநாடுநரும் எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. மேலும் விவரங்களுக்கு 04286-222260 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.