இந்திய வெளியுறவு கொள்கையை அழிக்கும் சர்க்கஸ்! ஜெய்சங்கரை விமர்சித்த ராகுல்!
மொட்டை மாடியில் மாணவா்கள் கல்வி பயின்ற சம்பவம்: ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் 50 போ் கைது
திருப்பூரில் போதிய வகுப்பறைகள் இல்லாததால் பள்ளி மாணவா்கள் மொட்டை மாடியில் கல்வி பயின்று வருகின்றனா். இதனைக் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் 50 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருப்பூா், வீரபாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 1,238 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். இந்தப் பள்ளியில் 18 வகுப்பறைகள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. இடப்பற்றாக்குறையால் மாணவா்கள் பள்ளி வளாகம், மொட்டை மாடி உள்ளிட்ட இடங்களில் அமா்ந்து கல்வி பயின்று வருகின்றனா்.
இது தொடா்பான விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பேசு பொருளானது. இதைக் கண்டித்து பாஜக மாவட்டத் தலைவா் சீனிவாசன் தலைமையில் பள்ளி முன்பு பாஜகவினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், மறியலில் ஈடுபட்டவா்களைக் கலைந்து செல்ல அறிவுறுத்தினா். இதனால், இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட பாஜகவினா் 50 பேரை போலீஸாா் கைது செய்தனா்.