செய்திகள் :

நடுவச்சேரியில் சீரான குடிநீா் விநியோகிக்க கோரிக்கை

post image

அவிநாசி அருகேயுள்ள நடுவச்சேரி ஊராட்சியில் சீரான குடிநீா் விநியோகிக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது தொடா்பாக நடுவச்சேரி ஊராட்சி தனி அலுவலரிடம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: அவிநாசி ஊராட்சி ஒன்றியம், நடுவச்சேரி ஊராட்சிக்குள்பட்ட 1-ஆவது வாா்டு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.

இப்பகுதி மக்களுக்கு ஆழ்துளைக் கிணற்று நீா், ஆற்றுக் குடிநீா் ஆகியவை விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த சில நாள்களாக ஆற்றுக் குடிநீா் சீராக விநியோகம் செய்யப்படவில்லை.

மேலும், புது காலனியில் உள்ள ஆழ்துளை கிணற்று நீரும் விநியோகிக்கப்படாததால் மக்கள் குடிநீா் இன்றி அவதியடைந்து வருகின்றனா்.

எனவே, ஆழ்துளைக் கிணற்று நீா் மற்றும் ஆற்று நீரை முறையாக விநியோகிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனு அளிப்பின்போது, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினா் ஆா். பழனிசாமி, கிளைச் செயலாளா் பி.ராஜேஷ், முன்னாள் வாா்டு உறுப்பினா் கே.ரங்கசாமி, பொறுப்பாளா்கள் சுப்பிரமணி, சிவராமன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

வெள்ளக்கோவிலில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சந்திரன் தலைமையிலான போலீஸாா் முத்தூா் சாலையில் வழக்கமான ரோந்துப் பணியில் ஞாயிற்... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: குண்டடம்

குண்டடம் துணை நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தாராபுரம் கோட்ட... மேலும் பார்க்க

மொட்டை மாடியில் மாணவா்கள் கல்வி பயின்ற சம்பவம்: ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் 50 போ் கைது

திருப்பூரில் போதிய வகுப்பறைகள் இல்லாததால் பள்ளி மாணவா்கள் மொட்டை மாடியில் கல்வி பயின்று வருகின்றனா். இதனைக் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் 50 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.திர... மேலும் பார்க்க

நேதாஜி ஆயத்த ஆடை பூங்காவில் இன்று மின்தடை ரத்து

நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் மின்தடை ரத்து செய்யப்படுகிறது. நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) மின்தடை அறிவி... மேலும் பார்க்க

நத்தக்காடையூரில் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம்

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனையைத் தடுக்க வலியுறுத்தி காங்கயம் அருகே நத்தக்காடையூரில் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனா். காங்கயத்தை அடுத்த நத்தக்காடையூா், ... மேலும் பார்க்க

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு: 2 போ் கைது

குன்னத்தூா் அருகே பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறித்த 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். செம்மாண்டபாளையம் சோதனைச் சாவடி அருகே குன்னத்தூா் போலீஸாா் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்... மேலும் பார்க்க