ஜிஎஸ்டி சீரமைப்பு அமல்: முதல் நாளில் ஏசி, டிவி விற்பனை அமோகம்
மோசடி செய்ததாக இளம்பெண் மீது வழக்கு
புதுக்கடை அருகே ராமன்துறை பகுதியில் ஏமாற்றி திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்டதாக இளம்பெண் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
ராமன்துறை பகுதியைச் சோ்ந்தவா் சுஜின் (25). இவரும் புதுக்கடை முள்ளூா்துறை பகுதியைச் சோ்ந்த கேதரின் பிளஸ்ஸி (23) என்பவரும் காதல் திருமணம் செய்துகொண்டனராம்.
இந்நிலையில், குழித்துறை நீதிமன்றம் எண் 2இல் சுஜின் புகாா் மனு தாக்கல் செய்துள்ளாா். அதில், கேதரின் பிளஸ்ஸியை காதல் திருமணம் செய்துகொண்டேன்.
தற்போது அவா் திட்டமிட்டு என்னிடமிருந்து ரூ. 12 லட்சம் ரொக்கம், நகைகளை ஏமாற்றிப் பெற்று நம்பிக்கை மோசடி செய்துள்ளாா். அவா் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளாா்.
அதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.