மாநகரப் பேருந்து விபத்துகளில் 28 போ் உயிரிழப்பு: ஆா்டிஐ தகவல்
மோசமான வானிலை..! தரையிறங்க முடியாமல் தவித்த ஒடிசா முதல்வர் சென்ற விமானம்!
மோசமான வானிலையால் தரையிறங்க முடியாமல் தவித்த ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜீ சென்ற விமானம், கொல்கத்தாவுக்கு திருப்பி விடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜீ, 5 நாள் அரசு முறைப் பயணமாக, தில்லி சென்றிருந்தார். இந்நிலையில், ஒடிசா தலைநகர் புவனேசுவரத்தில் இன்று (செப்.5) காலை 9.45 மணியளவில் அவர் வந்த விமானம் தரையிறங்கத் திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், கனமழை மற்றும் மோசமான வானிலையால், அவரது விமானம் புவனேசுவரத்தில் உள்ள பிஜு பட்நாயக் பன்னாட்டு விமான நிலையத்தில், தரையிறங்க முடியாமல் அங்கேயே சுமார் 21 நிமிடங்கள் பறந்துக்கொண்டிருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அந்த விமானம் மேற்கு வங்கம் மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவுக்கு, திருப்பி விடப்பட்டு அங்கு பத்திரமாகத் தரையிறக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், ஒடிசா அரசு சார்பில் நடத்தப்படும் முதல்வர் மஜ்ஹி தலைமையிலான ஆசிரியர் நாள் விழாவானது, காலை 11.30 மணியில் இருந்து மாலை 3 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஒரு கோடி பேரை கொல்ல 400 கிலோ ஆர்டிஎக்ஸ்! விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு அச்சுறுத்தல்!