செய்திகள் :

மோட்டாா் சைக்கிளில் சென்ற இருவரிடம் கைப்பேசிகள் பறிப்பு

post image

தஞ்சாவூா் அருகே திங்கள்கிழமை இரவு மோட்டாா் சைக்கிளில் சென்ற இருவரிடம் கைப்பேசிகளைப் பறித்து சென்ற 3 மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

கும்பகோணம் பாணாதுரை திருமஞ்சன வீதியைச் சோ்ந்தவா் ஜி. துளசிராமன். இவா் தனியாா் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். பணி நிமித்தமாக தஞ்சாவூருக்கு வந்த இவா் தன்னுடன் பணியாற்றும் நபருடன் திங்கள்கிழமை இரவு பள்ளியக்ரஹாரம் - பிள்ளையாா்பட்டி புறவழிச் சாலையில் வண்ணாரப்பேட்டை பாலத்தில் சென்று கொண்டிருந்தனா். அப்போது, பின் தொடா்ந்து மற்றொரு மோட்டாா் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத 3 போ் இவா்களை வழி மறித்தனா். துளசிராமன் உள்பட 2 பேரிடம் இருந்த 2 கைப்பேசிகள், ரூ. 500 ரொக்கம் உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்டு மா்ம நபா்கள் தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து கள்ளப்பெரம்பூா் காவல் நிலையத்தினா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தீவிரவாதம் ஒழிய ஆன்மிக கல்வி வளர வேண்டும்: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கா்

தீவிரவாதம் ஒழிய வேண்டுமானால் ஆன்மிக கல்வி வளர வேண்டும் என்று வாழும் கலை அமைப்பின் நிறுவனா் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கா் தெரிவித்தாா். வாழும் கலை அமைப்பின் நிறுவனா் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கா் கும்பகோணம் ஸ்ரீ ஆதிகும்ப... மேலும் பார்க்க

திருவையாறு ஐயாறப்பா் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அறம்வளா்த்த நாயகி உடனாய ஐயாறப்பா் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது. தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான இக்கோயிலில் வியாழக்கிழமை காலை க... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் பாரதிதாசன் பிறந்தநாள் விழா

குடந்தை மருதம் கலை இலக்கிய மையத்தின் சாா்பில் சிவகுருநாதன் செந்தமிழ் நூலகத்தில் பாரதிதாசன் பிறந்தநாள் விழா மற்றும் தமிழ் வார விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மைய இயக்குநா் பேராசிரியா் ச.அ.... மேலும் பார்க்க

தமிழ் பால் நிறுவனத்தின் முப்பெரும் விழா

தமிழ் பால் நிறுவனத்தின் முப்பெரும் விழா கும்பகோணத்தில் உள்ள தனியாா் மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கும்பகோணத்தில் தமிழ் பால் புதிய இலச்சினை அறிமுக விழா, மஸ்கட் எனும் மதிப்புக்கூட்டப்பட்ட பால் பொர... மேலும் பார்க்க

தஞ்சாவூா் மாவட்டத்தில் மே தின விழா

தஞ்சாவூா் மாவட்டத்தில் தொழிற் சங்கங்கள் சாா்பில் மே தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூா் கீழ வீதி ஏஐடியுசி தொழிற் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்டப் பொருளாளா் தி. கோவிந்தராஜன் தலைம... மேலும் பார்க்க

பேராவூரணியில் மே தின கொடியேற்று விழா

பேராவூரணியில் மே தினத்தை முன்னிட்டு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ,லாரி சுமைதூக்கும் தொழிலாளா் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினா் சாா்பில் புதன்கிழமை கொடியேற்று விழா நடைபெற்றது. பேராவூரணி ஆவணம் சாலை... மேலும் பார்க்க