நீதிபதி கவாயை வரவேற்க வராத உயர் அதிகாரிகள்... மகா., - கோவா வழக்குரைஞர்கள் சங்கம்...
மோதிக்கொண்ட அபிஷேக் சர்மா - திக்வேஷ் ரதி! அபராதத்துடன் ஒரு போட்டியில் விளையாட தடை!
ஹைதராபாத் வீரர் அபிஷேக் சர்மா மற்றும் லக்னௌ வீரர் திக்வேஷ் ரதி இருவரும் மைதானத்தில் மோதிக் கொண்ட நிலையில், இருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரின் லீக் சுற்றின் 61-வது போட்டி லக்னௌவின் எக்கானா மைதானத்தில் நேற்றிரவு(மே 19) நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றிபெற்ற நிலையில், தோல்வியடைந்த லக்னௌ அணி ஃபிளே-ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் தொடரிலிருந்து வெளியேறியது.
இந்தப் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடிய அபிஷேக் சர்மா 20 பந்துகளில் 59 ரன்கள் எடுத்த நிலையில், லக்னௌ வீரர் திக்வேஷிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். அபிஷேக் வெளியேறும் போது தனது வழக்கமான பாணியில் திக்வேஷ் கையெழுத்து கொண்டாட்டத்தில் ஈடுபட இருவருக்கும் இடையே வாக்குவாதமாக மாறியது.
கள நடுவர்கள் மற்றும் அணி வீரர்கள் சேர்ந்து இருவரையும் விலக்கிவிட்டனர். மேலும், அபிஷேக் சர்மா, திக்வேஷ் ரதியின் முடியைப் பிடிப்பது போலவும் சைகை காட்டினார். போட்டி முடிந்ததும் இருவரும் சமாதனமாக மாறி, கை கொடுத்துக் கொண்டனர். பிசிசிஐ துணைப் பொதுச் செயலரும், காங்கிரஸ் எம்பியுமான ராஜீவ் சுக்லாவும் இருவரிடமும் சிறிது நேரம் இதுபற்றி பேசி சமாதானப் படுத்திக்கொண்டிருந்தார்.
இந்த நிலையில், கிரிக்கெட் திடலில் மோதிக் கொண்ட லக்னௌ வீரர் திக்வேஷ் ரதிக்கு போட்டிக் கட்டணத்தில் 50 சதவிகித அபராதமும், ஒரு போட்டியில் விளையாடுவதற்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது. இதனால், அவர் அடுத்து நடைபெறும் குஜராத்துக்கு எதிரான போட்டியில் விளையாடமாட்டார். அது மட்டுமின்றி 5 தகுதியிழப்பு புள்ளிகளும் வழங்கப்பட்டிருக்கிறது. ஹைதராபாத் வீரர் அபிஷேக் சர்மாவுக்கு 25 சதவிகிதமும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று அபராதம் பெறுவதோ அல்லது சர்ச்சைகளில் சிக்குவது திக்வேஷூக்கு புதிதொன்றும் கிடையாது. இதற்கு முன்னதாக, பஞ்சாப் மற்றும் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியிலும் இதுபோன்ற கொண்டாட்டத்தில் ஈடுபட்டதால் முறையே 25 மற்றும் 50 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிக்க: டி20 போட்டிகளில் விராட் கோலியின் சாதனையை முறியடித்த கே.எல்.ராகுல்!
Kuch log hote hain jinhe bina baat ke Attitude hota hai, ye Digvesh Rathi vahi banda hai pic.twitter.com/1C6uvjlSXY
— Prayag (@theprayagtiwari) May 19, 2025
Whom do I support ? My ethnic Jaat brethren Digvesh Rathi, or my Linguistic Majhe da Baaman brethren Abhishek Sharma ? pic.twitter.com/7KbCuRMwz7
— Learner (@Learner73A) May 20, 2025