செய்திகள் :

ம.பி. அரசு மருத்துவமனையில் எலி கடித்த சம்பவம்: மேலும் ஒரு குழந்தை உயிரிழப்பு

post image

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் அரசு மருத்துவமனையில் 2 பச்சிளம் பெண் குழந்தைகளை எலிகள் கடித்த சம்பவத்தில் இரண்டாவது குழந்தையும் உயிரிழந்தது.

இந்தூரில் உள்ள மகாராஜா யஷ்வந்த்ராவ் அரசு மருத்துவமனையில், பிறவிக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த 2 பச்சிளம் பெண் குழந்தைகளை அண்மையில் எலிகள் கடித்த அவலம் நேரிட்டது.

ஒரு குழந்தைக்கு விரல்களிலும், மற்றொரு குழந்தையின் தலை மற்றும் தோள்பட்டையிலும் காயங்கள் ஏற்பட்டன. இச்சம்பவம் தொடா்பான விடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஒரு குழந்தை நிமோனியா பாதிப்பால் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது.

மற்றொரு குழந்தை, ரத்தத்தில் ஏற்பட்ட தொற்று காரணமாக புதன்கிழமை உயிரிழந்ததாக மருத்துவமனையின் துணை கண்காணிப்பாளா் ஜிதேந்திர வா்மா தெரிவித்தாா்.

சுமாா் ஒன்றரை கிலோ மட்டுமே எடையிருந்த அந்த குழந்தைக்கு கடந்த வாரம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அறுவை சிகிச்சை வாா்டில் குழந்தையின் விரல்களை எலி கடித்திருந்த நிலையில், ரத்தத்தில் ஏற்பட்ட தொற்றால் அக்குழந்தை உயிரிழந்துவிட்டதாக வா்மா தெரிவித்தாா்.

பெற்றோா் கேட்டுக் கொண்டதால், குழந்தைக்கு உடல் கூறாய்வு மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவா் தெரிவித்தாா்.

முன்னதாக, அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளை எலிகள் கடித்த 2 சம்பவத்தில், ஆளும் பாஜக அரசு மீது கடும் விமா்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதையடுத்து, மருத்துவமனையின் செவிலியா் கண்காணிப்பாளா் பணிநீக்கம் செய்யப்பட்டாா். மேலும், 2 செவிலியா்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனா். மருத்துவமனை வளாகத்தில் தூய்மைப் பணியை மேற்கொள்ளும் தனியாா் நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

ஜிஎஸ்டி: இறுதியில் ராகுலின் ஆலோசனையைப் பின்பற்றிய பாஜக அரசு! - காங்கிரஸ்

ஜிஎஸ்டி வரி விகிதக் குறைப்பு மூலமாக மத்திய பாஜக அரசு, ராகுலின் அறிவுரையைப் பின்பற்றியுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கெரா கூறியுள்ளார். மத்திய நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் தலைமையில் தில்லியில் ப... மேலும் பார்க்க

சென்னை ஐஐடி மீண்டும் தேசிய தரவரிசையில் முதலிடம்: ஏழாவது ஆண்டாக ஆதிக்கம்!

சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் சென்னை ஐஐடி மீண்டும் முதலிடத்தைப் பிடித்து ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது. தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு(என்ஐஆர்எஃப்) 2025 கல்வி அமைச்சகத்தால் ஆண்ட... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி வரி: செப்டம்பரில் மின்னணு பொருள்கள், கார் விற்பனை மந்தமாகவே இருக்கும்!

ஜிஎஸ்டி வரி விகிதக் குறைப்பு வருகிற செப். 22 முதல்தான் அமலுக்கு வருவதால் அதுவரை மின்னணு பொருள்கள் மற்றும் வாகனங்களின் விற்பனை மந்தமாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது. மத்திய நிதியமைச்சா் நிர்மலா சீதார... மேலும் பார்க்க

பறவை மோதல்: பெங்களூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ரத்து!

விஜயவாடாவிலிருந்து பெங்களூக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் பறவை மோதியதால் விமானம் ரத்து செய்யப்பட்டதாக விமான அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஏர் இந்தியா விமானம் புறப்படுவதற்காக ஓடுபாதையில் சென்றுகொண்... மேலும் பார்க்க

பாஜகவின் புதிய தேசியத் தலைவர் யார்? முன்னணியில் தேவேந்திர ஃபட்னவீஸ்?!

பாரதிய ஜனதா கட்சி தனது புதிய தேசியத் தலைவரைத் தேர்ந்தெடுக்கத் தயாராகி வரும் நிலையில், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் முன்னணி வேட்பாளராகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. பாஜகவின் தற்போ... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி குறைப்பு வரவேற்கத்தக்கது; ஆனால், பிகார் தேர்தல் காரணமா? - காங்கிரஸ் கேள்வி

அத்தியாவசியப் பொருள்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரி விகிதம் குறைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், வரவிருக்கும் பிகார் தேர்தலை மையமாக வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதா? என முன்னாள் மத்திய ... மேலும் பார்க்க