செய்திகள் :

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியானது!

post image

2024 ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வின் இறுதி முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் ஐஆா்எஸ் உள்ளிட்ட 24 வகையான குடிமைப் பணிகளுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வு, முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று படிநிலைகள் கொண்டது.

ஆண்டுக்கு ஒருமுறை இந்தத் தேர்வு நடத்தப்பட்டு வரும் சூழ்நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான இறுதித் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. https://upsc.gov.in/ என்ற இணையதளத்தில் தேர்வர்கள் முடிவுகளை அறியலாம்.

கடந்த 2024 ஜூன் 16 ஆம் தேதி முதல்நிலைத் தேர்வும் செப்டம்பர் மாதத்தில் முதன்மைத் தேர்வும் தொடர்ந்து ஜனவரி - ஏப்ரல் மாதத்தில் நேர்காணலும் நடைபெற்றது.

இறுதி தரவரிசைப் பட்டியலில் மொத்தமாக 1,009 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சக்தி துபே என்பவர் முதலிடம் பெற்றுள்ளார்.

ஜம்மு - காஷ்மீர் தாக்குதல்: முதல்வர் கண்டனம்

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது, ’’ஜம்மு - காஷ்மீரில் நடந்த பயங்... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு: பலி 27 ஆக உயர்வு!

ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹால்காமில் செவ்வாய்க்கிழமை மாலை நடந்த பயங்கரவாத தாக்குதலில் 27 பேர் பரிதாபமாக பலியாகினர். ஜம்மு- காஷ்மீரின் பஹால்காம் பகுதியில் பைசரன் எனும் புகழ்பெற்ற... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீருக்கு புறப்பட்டார் அமித் ஷா!

சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றதைத் தொடர்ந்து உள் துறை அமைச்சர் அமித் ஷா ஜம்மு - காஷ்மீருக்குப் புறப்பட்டுள்ளார். மேலும் பார்க்க

'நாடாளுமன்றத்தைத் தாண்டி எந்த அதிகாரமும் இல்லை' - உச்ச நீதிமன்றம் குறித்து ஜகதீப் தன்கர் மீண்டும் பேச்சு!

அரசியலமைப்பில் நாடாளுமன்றம்தான் உச்சபட்ச அதிகாரம் என்று குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் கூறியுள்ளார். மசோதாக்களை நிறுத்திவைத்ததாகக் கூறி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வ... மேலும் பார்க்க

நிஞ்சா 650 பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்தது கவாஸகி!

நிஞ்சா 650 பைக்கை இந்தியாவில் கவாஸகி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.ரேஸ் வாகனங்களுக்கு புகழ்பெற்ற கவாஸகி நிறுவனம் நிஞ்சா 650 பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்கின் விலை ரூ.7.27 லட்சமாக ... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீர் தாக்குதல்: அமித் ஷாவுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

ஜம்மு - காஷ்மீர் தாக்குதல் குறித்து மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினார். ஜம்மு- காஷ்மீரின் பஹால்காம் பகுதியில் பைசரன் எனும் புகழ்பெற்ற சுற்றுலாத் தளத... மேலும் பார்க்க