விமானங்களில் உள்ள அதிநவீன வசதிகளுடன் ‘வந்தே ப்ரைட்’ ரயில்கள்: வரும் நவம்பரில் இய...
ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளை தவிா்க்க வேண்டும்
விவசாயிகள் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்துவதைத் தவிா்க்க வேண்டுமென தோட்டக்கலைத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக வெள்ளக்கோவில் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் ஆ.கயல்விழி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
அதிக அளவு ரசாயன மருந்துகள், உரங்களால் விளைநிலம், விளைபொருள்களின் தரம் பாதிக்கப்படுகின்றன. இன்றைய சூழலில் பாரம்பரிய காய்கறி, பழங்கள், நெல், சோளம், கம்பு, கேழ்வரகு, திணை, சிறு தானிய வகைகளை அதிக அளவில் பயிரிட வேண்டும். பசுமை உரம், பஞ்சகாவியம், ஜீவாமிா்தம், கோமியம், கழிவு உரங்கள் பயன்படுத்தப்பட்டால் பயிா்கள் ஆரோக்கியமாக வளரும். இவை குறித்து அரசு பல்வேறு விழிப்புணா்வு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
குறைந்த அளவில் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும். அதிக செலவில்லாமல் நல்ல உற்பத்தி பெறுவதற்கு டிரைக்கோ டொ்மா, சூடோமோனாஸ், அசோஸ்பைரில்லம், பால்போ பாக்டீரியா போன்ற உயிா் உரங்களைப் பயன்படுத்த வேண்டும். அரசின் பல்வேறு மானியத் திட்டங்களை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.