செய்திகள் :

``ரசிகர் போரா? PR லாபியா?'' – தோனி குறித்த எதிர்மறை வீடியோ பரவலுக்கு இர்ஃபான் பாதானின் பதில்!

post image

இந்திய வேகப்பந்து வீச்சாளர் இர்ஃபான் பாதான் 2020ஆம் ஆண்டு அளித்த நேர்காணல் குறித்து தற்போது விளக்கம் அளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எம். எஸ். தோனி குறித்து பேசிய அவரது வீடியோ தற்போது 'ரசிகர் சண்டையிலும்' PR லாபியிலும் தவறான கருத்துடன் பரப்பப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

இர்ஃபான் பதான்

ஸ்போர்ட்ஸ் டாக் தளத்துக்கு அவர் அளித்த நேர்காணலில், அப்போது கேப்டனாக இருந்த எம். எஸ். தோனி செய்த மாற்றங்களால் தான் தனது சர்வதேச கரியர் முடிவுக்கு வந்தது குறித்து பேசியிருந்தார்.

அதில் தான், தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பெறுவதற்காக வீரர்களைக் காக்காப்பிடிப்பது கிடையாது எனக் கூறியிருந்தார். ஆனால் தோனியின் பெயரை குறிப்பிடவில்லை.

தற்போது, இர்ஃபான் தோனியைக் குறிப்பிட்டே அப்படிப் பேசியதாக சமூக வலைதளங்களில் அந்த வீடியோ பரவி வருகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்ததை வெளிப்படுத்தும் வகையில், “அரை தசாப்தத்திற்கு முந்தைய வீடியோ தற்போது அதன் கருத்து திரிக்கப்பட்டு பரவுகிறது. இது ரசிகர் போராக? PR லாபியா?” எனப் பதிவிட்டுள்ளார்.

இர்ஃபான் பாதான்

தோனி கேப்டனாக அறிமுகமான காலத்தில் முன்னணி பந்துவீச்சாளராகத் திகழ்ந்தார் இர்ஃபான் பாதான். 2007 டி20 உலகக் கோப்பையை வென்ற அணியில் அவர் முக்கிய பங்கு வகித்தார். 2008ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முத்தரப்பு தொடரில் வரலாற்றுச் சாதனை படைத்த வெற்றியிலும் இவரது பங்களிப்பு உண்டு.

ஆனால், காயங்கள் காரணமாக இவரது கரியரின் இரண்டாம் பாதி பிரகாசிக்கவில்லை. 2012ஆம் ஆண்டு தனது கடைசி ஒருநாள் சர்வதேசப் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த போதிலும், இர்ஃபான் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

IND vs AUS: இந்திய 'ஏ' அணியை அறிவித்த பிசிசிஐ - கேப்டனாகும் ஸ்ரேயஸ்!

2025 ஆசியக் கோப்பைக்கான இந்திய டி20 அணியில் இடம்பிடிக்கத் தவறிய ஸ்ரேயஸ் ஐயர், அடுத்த வாரம் நடைபெற இருக்கும் ஆஸ்திரேலியா 'ஏ' அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆஸ்திரேலிய... மேலும் பார்க்க

Dhoni: "ஐபிஎல்லில் டக்அவுட்டை நாடாத ஒரே கேப்டன்" - ரிக்கி பாண்டிங் புகழாரம்!

கிரிக்கெட் உலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டாடப்படும் வீரர் தோனி. அவருடைய பேட்டிங், கீப்பிங் திறமைகளைக் கடந்து கேப்டன்சிக்காகவும் புகழப்பட்டவர். Dhoni-யின் கேப்டன்சிஅவர் எடுக்கும் முடிவுகள் உள்ளுணர... மேலும் பார்க்க

BCCI: ரூ.3.17 கோடியிலிருந்து 3.50 கோடி - ஸ்பான்ஷர்ஷிப் கட்டணத்தை உயர்த்திய பிசிசிஐ

டிரீம் 11 (Dream 11) நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்த நிலையில் ஸ்பான்ஷர்ஷிப் கட்டணத்தை பிசிசிஐ உயர்த்தி இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. டிரீம் 11 நிறுவனம் கடந்த 2023 ஆம் ஆண்டு 358 கோடி ரூபா... மேலும் பார்க்க

Irfan Pathan - Dhoni: "நம் வீரர்கள் கேப்டன்களால் அழிக்கப்பட்டனர்; தோனி, கபில்தேவ்..." - யோகராஜ் சிங்

இந்திய முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் ஐந்தாண்டுகளுக்கு முன்பு பேசிய வீடியோ ஒன்று கடந்த சில நாள்களுக்கு முன்பு திடீரென வைரலானது.தோனி கேப்டனாக இருந்த சமயத்தில் நன்றாக செயல்பட்டும் அணியில் இடமளிக்காதது கு... மேலும் பார்க்க

"தோனிதான் எனக்கு இன்ஸ்பிரேஷன்; அவரைப்போல..." - பாக்., மகளிர் அணி கேப்டன் ஓபன்

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடர் செப்டம்பர் 30-ம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடரானது இந்தியா மற்றும் இலங்கையில் நவம்பர் 2-ம் தேதி வரை நடைபெறும்.நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து,... மேலும் பார்க்க

IPL-ல் 3 முறை ஹாட்ரிக் விக்கெட் எடுத்த ஒரே வீரர்; 25 வருட கரியரை முடித்துக் கொண்ட இந்திய சாம்பியன்!

ஐபிஎல்-லில் மூன்று முறை ஹாட்ரிக் விக்கெட் எடுத்த ஒரே வீரரான அமித் மிஸ்ரா, அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்திருக்கிறார்.சுழற்பந்துவீச்சாளரான இவர் 2003-ல் வங்காளதேசம், தென்னாப்பிரிக்க... மேலும் பார்க்க