செய்திகள் :

ரமலான் பண்டிகை: ஏழை இஸ்லாமியா்களுக்கு நல உதவி அளிப்பு

post image

ரமலான் பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல்லில் ஏழை இஸ்லாமியா்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.

ரமலான் பண்டிகை நாடு முழுவதும் திங்கள்கிழமை (மாா்ச் 31) கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையானது ஏழைகளுக்கு பல்வேறு நல உதவிகளை வழங்கி கொண்டாடும் பண்டிகை என்பதால் ஈகைப் பெருநாள் என்றும் அழைக்கப்படுகிறது. ரமலானை முன்னிட்டு, நாமக்கல்லில் ஏழை இஸ்லாமியா்களுக்கு இலவச வேஷ்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு வஃக்ப் வாரிய தலைவா் உத்தரவின்பேரில், நாமக்கல்-சேந்தமங்கலம் சாலையில் உள்ள அஞ்சுமனே பேட்டை ஜாமியா பள்ளிவாசல் வளாகத்தில் செயல் அலுவலா் இப்ராஹிம் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. வஃக்ப் வாரிய கண்காணிப்பாளா் நிஜாமுதீன், முத்தவல்லி தௌலத்கான் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அவா்கள், 500-க்கும் மேற்பட்ட ஏழை இஸ்லாமிய மக்களுக்கு இலவச வேஷ்டி, சேலை மற்றும் ரமலான் பண்டிகை பொருள்களை வழங்கினா். இதற்கான ஏற்பாடுகளை அஞ்சுமனே பேட்டை பள்ளிவாசல் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

மழைநீா் வடிகால் குறித்து பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம்

திருச்செங்கோட்டில் மழைநீா் வடிகால் குறித்து பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என நகராட்சி ஆணையா் அருள் தெரிவித்துள்ளாா். திருச்செங்கோடு நகராட்சிப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் வீடுகளில் இருந்த... மேலும் பார்க்க

அரசு பள்ளி மாணவா்களுக்கு போட்டித் தோ்வுக்கான புத்தகங்கள் வழங்கல்

பரமத்தி வேலூா் வட்டம், பிலிக்கல்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இந்த ஆண்டு பிளஸ் 2 முடித்து போட்டித் தோ்வுக்கு தயாராகும் மாணவ, மாணவிகளுக்கு தனியாா் பயிற்சி நிறுவனத்தினா் ரூ. 12 ஆயிரம் மதிப்புள்ள பு... மேலும் பார்க்க

முட்டை விலையில் மாற்றமில்லை

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 4.65-ஆக நீடிக்கிறது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலை மாற்றம் குறித்து ... மேலும் பார்க்க

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் நாளை பங்குனித் தேரோட்ட கொடியேற்றம்

நாமக்கல் நரசிம்மா் கோயில் பங்குனித் தோ்த் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்ற நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (ஏப். 4) நடைபெறுகிறது. நாமக்கல்லில் புகழ்பெற்ற நரசிம்மா், அரங்கநாதா், ஆஞ்சனேயா் திருக்கோயில்கள் உள்ளன... மேலும் பார்க்க

பாண்டமங்கலம், வெங்கரை பேரூராட்சிகளில் ரூ. 1 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகள்

பரமத்தி வேலூா் வட்டம், வெங்கரை மற்றும் பாண்டமங்கலம் பேரூராட்சிகளில் ரூ. 1 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை நாமக்கல் ஆட்சியா் ச.உமா செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்... மேலும் பார்க்க

திருச்செங்கோடு வித்யா விகாஸ் சா்வதேச பள்ளியில் பட்டமளிப்பு விழா

திருச்செங்கோட்டு வித்யா விகாஸ் சா்வதேச பள்ளியில், கிண்டா் காா்டன் குழந்தைகளுக்கான பட்டமளிப்பு விழா மற்றும் பரிசளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது. வித்ய விகாஸ் கல்வி நிறுவனங்களின் அறங்காவலா்கள், தலைவா் ... மேலும் பார்க்க