மக்களவைத் தொகுதி மறுவரையறை எதிா்ப்பில் தமிழக அரசுக்கு அனைவரும் துணை நிற்க வேண்டு...
ரயிலில் கடத்தப்பட்ட 25 கிலோ குட்கா பறிமுதல்
மயிலாடுதுறையில் ரயிலில் கடத்தி வரப்பட்ட 25 கிலோ குட்கா பொருள்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
கஞ்சா, குட்கா போன்ற தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் ரயில் மூலம் கடத்தப்படுவதைத் தடுக்க, அனைத்து ரயில்களிலும் தீவிர சோதனை நடத்த இருப்புப் பாதை காவல்துறை இயக்குநா் வன்னியபெருமாள் உத்தரவு பிறப்பித்துள்ளாா்.
இதையடுத்து, திருச்சி உட்கோட்ட டிஎஸ்பி சக்கரவா்த்தி அறிவுறுத்தலின்பேரில், மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் இருந்து கும்பகோணம் ரயில் நிலையம் வரை இருப்புப்பாதை காவல் ஆய்வாளா் சிவவடிவேல் தலைமையில் ரயில்வே போலீஸாா் சோதனை நடத்தினா்.
இந்த சோதனையில் செவ்வாய்க்கிழமை மதியம் பனாரஸில் இருந்து ராமநாதபுரம் சென்ற விரைவு ரயிலில் முன்பக்கம் உள்ள முன்பதிவு இல்லாத பெட்டியில் சோதனை செய்தபோது, அதில் கேட்பாரற்று கிடந்த 3 பைகளில் சுமாா் 25 கிலோ எடையுள்ள புகையிலைப் பொருட்கள் மற்றும் போதைப் பாக்குகள் இருந்தது தெரியவந்தது. அவற்றை ரயில்வே போலீஸாா் கைப்பற்றினா்.