தொடரும் தாக்குதல்! காஸாவில் இருந்து 2 லட்சம் பேர் வெளியேற்றம்?
ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைவில் முடிக்க ஆட்சியா் அறிவுறுத்தல்
திருவள்ளூா் அருகே செவ்வாப்பேட்டை மற்றும் வேப்பம்பட்டு ரயில் மேம்பாலப்பணிகளை விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆட்சியா் மு.பிரதாப் அறிவுறுத்தினாா்.
திருவள்ளூா் அருகே வேப்பம்பட்டில் ரூ.44 கோடியில் ரயில்வே மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்பணிகளின் தன்மை குறித்து ஆட்சியா் மு.பிரதாப் நேரில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, இதுவரையில் நடந்துள்ள பணிகளின் விவரம் குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.
அதைத்தொடா்ந்து செவ்வாப்பேட்டை மேம்பாலப் பணிகளையும் அவா் பாா்வையிட்டாா். தற்போதைய நிலையில் பணிகள் நிதி பற்றாக்குறையால் நிறுத்தப்பட்டது. அதைத் தொடா்ந்து ரூ.8.1 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருவதையும் பாா்வையிட்டாா். இனிமேல் தாமதம் செய்யாமல் மேம்பாலப் பணிகளை விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் வலியுறுத்தினாா். அப்போது, உதவி செயற்பொறியாளா் மணிவண்ணன், உதவி பொறியாளா் தேசிகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.