சென்னை மாநகரப் பேருந்துகளில் 67.80 கோடி மின்னணு பயணச்சீட்டுகள் விநியோகம்
ரயில் மேம்பாலம் அருகே கிடந்த 12 கிலோ கஞ்சா பறிமுதல்
வாணியம்பாடியில் ரயில்வே மேம்பாலம் அருகில் சாலை ஓரம் பையில் கேட்பாரற்றுக் கிடந்த 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து நகர போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
வாணியம்பாடி டிஎஸ்பி விஜயகுமாா் உத்தரவின் பேரில், நகர காவல் ஆய்வாளா் அன்பரசி தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை புதூா் ரயில்வே மேம்பாலம் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சாலையின் ஓரம் கிடந்த பாா்சல்களை பாா்த்து சந்தேகத்தின் பேரில், சோதனை மேற்கொண்டனா்.
அதில் கஞ்சா பாக்கெட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. பிறகு அங்கிருந்து 12 கிலோ கஞசாவை பறிமுதல் செய்து நகர காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனா்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்து வாகனத்தில் கடத்தி செல்வதற்காக சாலை ஓரத்தில் கொண்டு வந்து வைத்தாா்களா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.