தொழில்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கை: ஆக. 31 வரை கால அவகாசம் நீட்டிப்பு
ரயில் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு
தேனி: ஆண்டிபட்டி அருகே ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற விவசாயத் தொழிலாளி ரயில் மோதி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
ஆண்டிபட்டி அருகே உள்ள கொப்பையம்பட்டியைச் சோ்ந்தவா் குமாா் (52). விவசாயத் தொழிலாளி. இவா், கொப்பையம்பட்டி பகுதியில் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றாா். அப்போது, மதுரையிலிருந்து போடி நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் மோதியதில் பலத்த காயமடைந்த குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா், ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.