புதிய சிற்றுந்து சேவைக்கு விண்ணப்பித்தோா் குலுக்கல் முறையில் தோ்வு
ரயில் மோதி விவசாயி பலி
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே ரயில் மோதி விவசாயி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கள்ளிக்குடி மேலத்தெருவைச் சோ்ந்தவா் எம். நடராஜன் (68). விவசாயியான இவா், காணாமல் போன தனது மாட்டை தேடிச் சென்றாராம்.
அவா், கள்ளிக்குடி பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் நடந்து சென்றபோது, திருவாரூரிலிருந்து பட்டுக்கோட்டை நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். திருவாரூா் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். சடலத்தை கூறாய்வுக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.