செய்திகள் :

ரஷியா - உக்ரைன் இடையே மிகப் பெரியளவில் போர்க் கைதிகள் பரிமாற்றம்!

post image

ரஷியா மற்றும் உக்ரைன் ஆகிய இருநாடுகளுக்கு இடையில் மிகப் பெரியளவில் போர்க் கைதிகள் பரிமாற்றம் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஷியா - உக்ரைன் போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெரியளவில் ஈடுபாடுகாட்டி வருகின்றார். இந்நிலையில், 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்தப் போரில் இருநாடுகளுக்கும் இடையில் மிகப் பெரியளவில் போர்க் கைதிகளின் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக அதிபர் டிரம்ப் இன்று (மே 23) தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, தனது சமூகவலைதளப் பக்கத்தில் கூறியுள்ள அவர், ரஷியா மற்றும் உக்ரைன் இடையில் மிகப் பெரியளவில் போர்க் கைதிகள் பரிமாற்றம் முடிவடைந்துள்ளதாகக் கூறியுள்ளார். மேலும், “இது பெரிய மாற்றத்துக்கு வழிவகுக்குமா?’ என்ற கேள்வியையும் அந்தப் பதிவில் அவர் முன்வைத்துள்ளார்.

ஆனால், இருநாடுகளுக்கும் இடையில் போர்க் கைதிகளின் பரிமாற்றம் இன்று (மே 23) காலை முதல் நடைபெற்று வருவதாகவும் அது இன்னும் முடிவுக்கு வரவில்லை எனவும் உக்ரைனின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தப் புதிய நடவடிக்கையைப் பற்றி ரஷியா இதுவரை எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை.

முன்னதாக, கடந்த வாரம் முதல்முறையாக ரஷியா மற்றும் உக்ரைன் அதிகாரிகள், துருக்கியில் நேரடியாக அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினர். வெறும் 2 மணி நேரம் மட்டுமே அந்தச் சந்திப்பு நடைபெற்றபோதும், இருநாடுகளும் போர்க் கைதிகளின் பரிமாற்றத்துக்கு ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: இந்தியா அல்ல, அமெரிக்காவுக்கு வெளியே எங்கு ஆப்பிள் ஐஃபோன் தயாரித்தாலும் 25% வரி: டிரம்ப்

எக்ஸ் தளம் திடீரென முடங்கியது!

சமூக ஊடகமான எக்ஸ் தளம் திடீரென முடங்கியதாக பயனர்கள் அவதி தெரிவித்து வருகின்றனர். எக்ஸ் வலைதளம், செயலி இரண்டும் முடங்கியதாக புலம்பி வருகின்றனர். சுமார் ஒரு மணிநேரமாக எக்ஸ் தளத்தில் தேடல், உள்ளடக்கம் இர... மேலும் பார்க்க

இந்தியா - பாகிஸ்தான் - சீனா! டிராகனின் இரட்டை விளையாட்டு!

இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பாகிஸ்தானுக்கு சீனா, துருக்கி, அஜர்பைஜான் உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றன. இருப்பினும், பாகிஸ்தானுக்கு சீனா முழு ஆதரவையும் வழங்கத் தயங்குகிறது. கா... மேலும் பார்க்க

மங்கோலியாவில் வேகமாகப் பரவும் தட்டம்மை! 3000-ஐ தாண்டிய பாதிப்புகள்!

கிழக்கு ஆசிய நாடான மங்கோலியாவில் 3000-க்கும் அதிகமான தட்டம்மை பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.மங்கோலியா நாட்டில் தட்டம்மை தொற்றுப் பரவல் வேகமெடுத்து வரும் சூழலில் அந்நாட்டில் இதுவரை 3,042 பேர் பாதி... மேலும் பார்க்க

ரஷியா - உக்ரைன் இடையே 390 போர்க் கைதிகள் பரிமாற்றம்!

ரஷியா மற்றும் உக்ரைன் ஆகிய இருநாடுகளுக்கும் இடையில் முதல்முறையாக போர்க் கைதிகளின் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. ரஷியா - உக்ரைன் போர் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் சூழலில், துருக்கியில் கடந... மேலும் பார்க்க

ஜெர்மனியில் பெண் நடத்திய கத்திக்குத்து சம்பவத்தில் 18 பேர் படுகாயம்!

ஜெர்மனியின் ஹம்பர்க் பகுதியில், ஒரு பெண் நடத்திய கத்திக் குத்துச் சம்பவத்தில் 18 பேர் காயமடைந்தனர். அவர்களில் 4 பேரின் நிலைமைக் கவலைக்கிடமாக உள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவத்த... மேலும் பார்க்க

விதிகளை பூா்த்தி செய்ததால் பாகிஸ்தானுக்கு ரூ.8,527 கோடி கடன்: ஐஎம்எஃப்

விதிகள் மற்றும் இலக்குகளை பாகிஸ்தான் பூா்த்தி செய்ததால் பாகிஸ்தானுக்கு ரூ.8,527 கோடி (1 பில்லியன் டாலா்) கடன் வழங்கப்பட்டதாக சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) தெரிவித்தது. பாகிஸ்தானுக்கு விரிவுபடுத்தப்பட்ட ந... மேலும் பார்க்க