செய்திகள் :

``ரஷ்ய எண்ணெய் கொள்முதல்; இந்தியாவை விட சீனாவே அதிகம்'' - டிரம்புக்கு ஜனநாயகக் கட்சி கண்டனம்

post image

ரஷ்யாவில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதுதான் உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலுக்கு முக்கிய காரணம் எனக் கூறிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியா மீது 50 சதவீத சுங்கவரி விதித்துள்ளார்.

இது இந்தியா - அமெரிக்கா உறவுகளைப் பாதிக்கக் கூடும் என்று, அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளியுறவு விவகாரக் குழுவில் உள்ள ஜனநாயகக் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஜனநாயகக் கட்சியினர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,
``ரஷ்ய எரிபொருளை அதிகம் வாங்கும் சீனாவிற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல், இந்தியா மீது மட்டும் கவனம் செலுத்துவது கண்டிக்கத்தக்கது.

இந்தியா மீதான நடவடிக்கை உக்ரைன் தொடர்பான விவகாரம் அல்ல என்பதையே இது காட்டுகிறது" எனக் குறிப்பிட்டு, நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான ஒரு கட்டுரையின் இணைப்பையும் பகிர்ந்துள்ளனர்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

அந்தக் கட்டுரையில்,
``ரஷ்ய எரிபொருளை வாங்கும் அனைத்து நாடுகளுக்கும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தால் அது வேறு விஷயம்.

ஆனால் ரஷ்ய எரிசக்தியின் மிகப்பெரிய இறக்குமதியாளரான சீனாவிற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல், இந்தியா மீது மட்டும் கவனம் செலுத்துவது குழப்பமான ஒரு முடிவாகும்.

தள்ளுபடி விலையில் எண்ணெய் வாங்கும் சீனா இதுவரை அமெரிக்காவின் விமர்சனத்திலிருந்து தப்பித்திருக்கிறது.'' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகையின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ, ``உக்ரைன் போர் என்பது மோடியின் போர்'' என வெளிப்படையாக விமர்சித்தது கவனிக்கத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

Doctor Vikatan: ஆசிரியர் வேலை, சாக்பீஸ் பயன்பாட்டால் தொண்டை எரிச்சல், வறட்டு இருமல்; தீர்வு என்ன?

Doctor Vikatan:நான் ஆசிரியராகப் பணிபுரிகிறேன். எனக்கு அடிக்கடி தொண்டை எரிச்சலும் வறட்டு இருமலும் ஏற்படுகிறது. இதற்கு காரணம் சாக்பீஸ் அலர்ஜி என்று கூறுகிறார்கள். அது உண்மையாக இருக்குமா? இதற்கு தீர்வு ச... மேலும் பார்க்க

``தமிழரை பிரதமர் ஆகவிடாமல் தடுத்த சக்திகள்'' - மூப்பனார் நினைவு நாள் விழாவில் நிர்மலா சீதாராமன்

காங்கிரஸ் மூத்த தலைவரும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிறுவனருமான ஜி.கே. மூப்பனாரின் நினைவுநாள் இன்று கடைபிடிக்கப்பட்டது.சென்னை தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கம் பின்புறம் அமைந்துள்ள ஜி.கே. மூப்பனாரி... மேலும் பார்க்க

``நிரந்தர நண்பர்களோ எதிரிகளோ இல்லை; நலன்களே நிரந்தரம்'' - ராஜ்நாத் சிங்

என்டிடிவி பாதுகாப்பு உச்சி மாநாடு 2025என்டிடிவி பாதுகாப்பு உச்சி மாநாடு 2025 நடத்தப்பட்டது. இதில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு உரையாற்றினார்.அதில் அவர் கூறியதாவது:“இந்தியாவின... மேலும் பார்க்க

``காவல்துறையினர், ஆசிரியர்கள் சாதிப் பெயரில் வாட்ஸ்அப் குழு நடத்துகிறார்கள்'' - CPM பெ.சண்முகம்

"சாதிப் பெயர்களில் வாட்ஸ்அப் குழுக்களை காவல்துறையினர், ஆசிரியர்கள் நடத்தி வருகிறார்கள். அரசின் உயர் பொறுப்புகளில் உள்ள ஒரே சமூகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் உடனடியாக மாற்றப்பட வேண்டும்" என சிபிஎம் மாநிலச்... மேலும் பார்க்க

``அதிமுக ஒன்றுபட்டால் வெற்றி நிச்சயம்; திமுக மீண்டும் ஆட்சி அமைக்கக் கூடாது'' - வி.கே. சசிகலா

திமுக கூட்டணி, பாஜக - அதிமுக கூட்டணி, தனித்துக் களம் காணும் சீமான், உள்கட்சி பிரச்சினையால் கூட்டணி இழுபறியில் இருக்கும் பாமக, புதிதாக தேர்தல் களம் காணும் விஜய் என 2026 சட்டமன்றத் தேர்தல் இப்போதே சூடு... மேலும் பார்க்க

இருக்கன்குடி மாரியம்மன் கோயில்: ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு

விருதுநகர் மாவட்டம், இருக்கன்குடி மாரியம்மன் கோயில் அருகேயுள்ள 350-க்கும் மேற்பட்ட கடைகளை அகற்ற உயர்நீதிமன்றம், மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.இருக்கன்குடி மாரியம்மன் கோயில் பொதுநல மனுமதுரை அண்ணாநகரை சேர... மேலும் பார்க்க