ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் 2025: 12 ராசிகளுக்கும்!
2025-ஆம் ஆண்டுக்கான ராகு - கேது பெயர்ச்சி பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்துள்ளார்.
வாக்கிய பஞ்சாங்கப்படி ஏப்ரல் 26-ம் தேதி ராகு-கேது பெயர்ச்சி நடந்து முடிந்தது. திருக்கணித பஞ்சாங்கத்தின்படி ஸ்வஸ்திஸ்ரீ விஸ்வாவசு வருடம் மே 18-ஆம் தேதி ராகு-கேது பெயர்ச்சி நிகழ உள்ளது.
ஸ்ரீராகு பகவான் மீன ராசியிலிருந்து கும்ப ராசிக்கும், ஸ்ரீகேது பகவான் கன்னியா ராசியிலிருந்து சிம்ம ராசிக்கும் மாறுகிறார்.
மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)
எடுக்கும் காரியங்களை வேகத்தோடும், விவேகத்தோடும் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட மேஷ ராசி அன்பர்களே!!
கிரகநிலை
26-04-2025 அன்று ராகு பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
26-04-2025 அன்று கேது பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து பஞசம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
11-05-2025 அன்று குரு பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
நினைத்தது நிறைவேறும் பெயர்ச்சியாக அமையும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். இதுவரை தடைப்பட்ட திருமணம் போன்ற சுப காரியங்கள் தடைவிலகி இனிதாக நடைபெறும். புத்திர பாக்கியம் எதிர்பார்த்திருந்தவர்களுக்கு சந்தான பாக்கியம் கிட்டும். பலர் சொந்தமாக வீடு, வாகனம் வாங்கி மகிழ்வர். பூர்வீக சொத்துக்களால் லாபம் அடைவர். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கணவன் - மனைவி இடையே ஒற்றுமை பலப்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. செய்யும் தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைக்கும். வேலையில் எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு பெற்று மனமகிழ்வர். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
விரிவாக படிக்க:ராகு - கேது பெயர்ச்சி 2025: மேஷம்
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)
தன்னை அழகுபடுத்திக் கொள்வதில் அதிக அக்கறையும், ஆடை ஆபரணங்களின் மீது ஆர்வமும் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே!
கிரகநிலை
26-04-2025 அன்று ராகு பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
26-04-2025 அன்று கேது பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
11-05-2025 அன்று குரு பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இந்த பெயர்ச்சியால் உங்களுக்கு தேவையற்ற அலைச்சல் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். குடும்பத்திலுள்ளவர்களால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். கணவர் - மனைவியிடையே வீண் வாக்கு வாதங்கள் உண்டாகும். உற்றார் - உறவினர்களை அனுசரித்துச் செல்ல வேண்டியிருக்கும், திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமத பலன் ஏற்படும்.
பண வரவுகளில் நெருக்கடிகள் நிலவினாலும் எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். ஆனால் எதையும் சமாளிக்கும் திறன் உண்டாகும். ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்திலும் போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் இருக்கும் வாய்ப்புகளை நழுவவிடாதிருப்பது நல்லது. கூட்டாளிகளும், தொழிலாளர்கள் ஓரளவுக்கு ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும்.
விரிவாக படிக்க:ராகு - கேது பெயர்ச்சி 2025: ரிஷபம்
மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)
பார்வைக்கு வெகுளி போல இருந்தாலும் தன்னுடைய காரியங்கள் அனைத்தையும் எளிதில் சாதித்துக்கொள்ளும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி அன்பர்களே!!
கிரகநிலை:
26-04-2025 அன்று ராகு பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
26-04-2025 அன்று கேது பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
11-05-2025 அன்று குரு பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.
இந்த பெயர்ச்சியால் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதம் உண்டாகும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கணவன் - மனைவிடையே சிறு சிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்படும் என்றாலும் பெரிய கெடுதி இல்லை. பொன்பொருள் சேரும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும் என்றாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படமுடியும்.
விரிவாக படிக்க: ராகு - கேது பெயர்ச்சி 2025: மிதுனம்
கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)
நல்ல அறிவாற்றலும், கற்பனைத் திறனும் எதிலும் சிந்தித்துச் செயல்படும் குணமும் கொண்ட கடக ராசி அன்பர்களே!!
கிரகநிலை
26-04-2025 அன்று ராகு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
26-04-2025 அன்று கேது பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
11-05-2025 அன்று குரு பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இந்த பெயர்ச்சியில் ராகு குடும்ப ஸ்தானத்திற்கு வந்தாலும் உங்கள் ராசிக்கு நட்பு கிரகமான குருவுடன் இணைந்திருக்கிறார். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்னைகள் விலகி கணவன் - மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.
விரிவாக படிக்க: ராகு - கேது பெயர்ச்சி 2025: கடகம்
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் முடிய)
வாழ்வில் எதையாவது சாதிக்க வேண்டுமென்ற வேட்டை கொண்ட சிம்ம ராசி அன்பர்களே!!
கிரகநிலை
26-04-2025 அன்று ராகு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
26-04-2025 அன்று கேது பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.
11-05-2025 அன்று குரு பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இந்த பெயர்ச்சியில் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும் என்றாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். பிள்ளைகளால் சிறுசிறு மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். உற்றார்-உறவினர்களை அனுசரித்துச் செல்ல வேண்டியிருக்கும்.
விரிவாக படிக்க: ராகு - கேது பெயர்ச்சி 2025: சிம்மம்
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)
அழகிய உடல்வாகு நீல விழியும், சிறந்த ஒழுக்கமும் கொண்ட கன்னி ராசி அன்பர்களே!!
கிரகநிலை
26-04-2025 அன்று ராகு பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
26-04-2025 அன்று கேது பகவான் ராசியில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
11-05-2025 அன்று குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இந்த பெயர்ச்சியால் நீங்கள் எடுத்த முயற்சிகளில் வெற்றியினைப் பெற்றிடுவீர்கள். பண வரவுகளில் சிறு சிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத வகையில் உதவிகள் கிட்டும். குடும்பத்தில் சுபவிரயங்கள் ஏற்படும் என்பதால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகளும் உண்டாகும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
விரிவாக படிக்க: ராகு - கேது பெயர்ச்சி 2025: கன்னி
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்
அனைவரையும் கவர்ந்திழுக்கக்கூடிய அழகும், அறிவும் உடைய துலா ராசி அன்பர்களே!!
கிரகநிலை
26-04-2025 அன்று ராகு பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து பஞசம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
26-04-2025 அன்று கேது பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
11-05-2025 அன்று குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இந்த பெயர்ச்சியால் குடும்பத்தில் தடைப்பட்டுக் கொண்டிருந்த திருமணம் போன்ற சுபகாரியங்கள் யாவும் தடை விலகி கைகூடும். பணவரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. சுக வாழ்வு அமையும். சொந்தமாக வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கக்கூடிய யோகமும் சிலருக்கு உண்டாகும். எதிலும் வெற்றிமேல் வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது.
விரிவாக படிக்க: ராகு - கேது பெயர்ச்சி 2025: துலாம்
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)
நல்ல அறிவாற்றலும், மற்றவர்களின் மனநிலையறிந்து பேசும் திறனும் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே!!
கிரகநிலை
26-04-2025 அன்று ராகு பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
26-04-2025 அன்று கேது பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
11-05-2025 அன்று குரு பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இந்த பெயர்ச்சியில் தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் புதிய முயற்சிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப் பளு அதிகரித்தாலும் கிடைக்க வேண்டிய உயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும். பணவரவுகள் தேவைகேற்றபடியிருக்கும். கணவன் - மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றிமறையும். குடும்ப ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும்.
விரிவாக படிக்க:ராகு - கேது பெயர்ச்சி 2025: விருச்சிகம்
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)
கம்பீரமான தோற்றமும், சிறந்த தெய்வ பக்தியும், எதிலும் தைரியத்துடன் செயல்படும் ஆற்றலும் கொண்ட தனுசு ராசி அன்பர்களே!!
கிரகநிலை
26-04-2025 அன்று ராகு பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
26-04-2025 அன்று கேது பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
11-05-2025 அன்று குரு பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இந்த பெயர்ச்சியின் மூலம் குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும். கணவன் - மனைவியிடையே ஒற்றுமை நிலவும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன், பொருள் சேரும். சொந்த பூமி, மனை வாங்கும் யோகம் உண்டாகும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று மேன்மை ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கிய விஷயங்களில் கவனமுடனிருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்கள் சிறப்பாக அமையும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவைகளாலும் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கும் தடைபட்டுக் கொண்டிருந்த பதவி, ஊதிய உயர்வுகள் தற்போது கிடைக்கும்.
விரிவாக படிக்க:ராகு - கேது பெயர்ச்சி 2025: தனுசு
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)
எதிலும் போராடி வெற்றிபெறக்கூடிய ஆற்றலும் தன்னம்பிக்கையும், தைரியமும் கொண்ட மகர ராசி அன்பர்களே!!
கிரகநிலை
26-04-2025 அன்று ராகு பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
26-04-2025 அன்று கேது பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
11-05-2025 அன்று குரு பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இந்த ராகு கேது பெயர்ச்சியால் அதீதமாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும், குடும்பத்தில் முன்னேற்றமும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படலாம். திருமன சுபகாரியங்களில் சிறு சிறு தடைகளுக்கு பின் வெற்றிகிட்டும். பொருளாதார நிலையும் தேவைக்கேற்றபடியிருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். பணம் கொடுக்கல், வாங்கல் போன்றவற்றில் கவனமுடன் இருப்பது நல்லது.
தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். கணவன் - மனைவியிடையே தெவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் சற்று போட்டிகளை எதிர்கொண்டே முன்னேற்றம் அடையமுடியும். எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது.
விரிவாக படிக்க: ராகு - கேது பெயர்ச்சி 2025: மகரம்
கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)
எந்த பிரச்னைகளையும் அலசி ஆராய்ந்து நியாயமாக தீர்த்துவைக்கும் அறிவாற்றல் கொண்ட கும்ப ராசி அன்பர்களே!!
கிரகநிலை
26-04-2025 அன்று ராகு பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.
26-04-2025 அன்று கேது பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
11-05-2025 அன்று குரு பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞசம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இந்த பெயர்ச்சியின் மூலம் பணவரவுகளுக்கான பஞ்சமிருக்காது. கடன்கள் யாவும் குறையும். குடும்பத்தில் தடைபட்டுக் கொண்டிருந்த சுப காரியங்கள் யாவும் தடை விலகி கைகூடும். நல்ல வரன்கள் தேடிவரும். புத்திர பாக்கியமும் உண்டாகும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப்பெறும். கணவன் - மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.
விரிவாக படிக்க: ராகு - கேது பெயர்ச்சி 2025: கும்பம்
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
எல்லாருக்கும் எல்லா சமயங்களிலும் உதவிகரமாகத் திகழவேண்டுமென்ற எண்ணம் கொண்ட மீன ராசி அன்பர்களே!!
கிரகநிலை
26-04-2025 அன்று ராகு பகவான் ராசியில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
26-04-2025 அன்று கேது பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
11-05-2025 அன்று குரு பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இந்த பெயர்ச்சியின் மூலம் தேவையற்ற மறைமுக எதிர்ப்புகள் மறையும். வீண் வம்பு, வழக்குகள் முடிவிற்கு வரும். பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும் சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றிகிட்டும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயங்களில் அனுகூலப்பலன் கிட்டும்.