பேரன்புடன், மெய்! இயக்குநர் பிரேம் குமாருக்கு கார் பரிசளித்த கார்த்தி!
ராஜகோபாலப்பேரியில் ரேஷன் கடை கட்டடம் திறப்பு
சுரண்டை அருகேயுள்ள ராஜகோபாலப்பேரியில் ரூ.9.75 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டடம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் எஸ்.காவேரி தலைமை வகித்தாா். ஊராட்சி மன்றத் தலைவா் கிருஷ்ணஜெயந்தி காவேரி முன்னிலை வகித்தாா்.
தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் சு.பழனிநாடாா், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன் ஆகியோா் புதிய கட்டடத்தை திறந்துவைத்தனா்.
இதில் ஒன்றியக்குழு உறுப்பினா் நான்சி, மாவட்ட ஊராட்சித் தலைவா் தமிழ்செல்வி, சுப்பிரமனியன், வேதக்கண்ராஜ், நவநீதகிருஷ்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.