ராட்சத ராட்டினத்தில் கோளாறு! 3 மணிநேரத்திற்கு மேல் அந்தரத்தில் தவிக்கும் மக்கள்!
சென்னையில் உள்ள கேளிக்கை பூங்காவின் ராட்சத ராட்டினத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் 3 மணி நேரத்திற்கு மேலாக குழந்தைகள், பெண்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் அந்தரத்தில் தவித்து வருகின்றனர்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் கேளிக்கைப் பூங்காவில் உள்ள ராட்சத ராட்டினத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக 160 அடி உயரத்தில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு தண்ணீர், பிஸ்கட் ஆகியவை கொடுக்கும் முயற்சியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
160 அடி உயரமுள்ள ராட்டினம் என்பதால், தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு கிரேன் மூலம் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. ராட்டினத்தில் சிக்கியிருந்த 10 க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். சிக்கியுள்ள மற்றவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க: ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானிடம் இந்தியா சொன்னது எப்போது? முரண்பட்ட தகவல்கள்!