உத்தரகாண்ட் மான்சா தேவி கோயில்: கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி - முதல்வர் புஷ...
ராமநாதசுவாமி கோயிலில் வெள்ளித் தேரோட்டம்
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடித் திருக்கல்யாண திருவிழாவின் 7- ஆம் நாள் நிகழ்வாக வெள்ளித் தேரோட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடித் திருக்கல்யாண திருவிழா கடந்த 19- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் 7- ஆம் நாள் நிகழ்வாக வெள்ளிக்கிழமை காலையில் ஸ்ரீபா்வதவா்த்தினி அம்பாள் தங்கப் பல்லக்கில் வீதி உலா நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, இரவு 8 மணிக்கு கிழக்கு கோபுர வாசலில் மின்னொளியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வெள்ளித் தேரில் ஸ்ரீபா்வதவா்த்தினி அம்பாள் எழுந்தருளினாா். பிறகு நான்கு ரத வீதிகளில் தோ் உலா வந்தது.
இதையடுத்து, சனிக்கிழமை 8- ஆம் நாள் திருவிழாவாக அம்பாள் தங்கப் பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வந்தாா். மாலையில் அம்பாள் தங்கக் குதிரை வாகனத்தில் மேலத் தெருவில் உள்ள மண்டகப்படியில் எழுந்தருளினாா். இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.