ராமநாதசுவாமி கோயில் ஆடித் திருக்கல்யாண திருவிழா நாளை தொடக்கம்
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், ராமநாதசுவாமி கோயில் ஆடித் திருக்கல்யாண திருவிழா சனிக்கிழமை (ஜூலை 19) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த விழா, ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை 17 நாள்கள் நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வுகளாக வருகிற 24- ஆம் தேதி ஆடி அமாவாசை தீா்த்தவாரியும், 25- ஆம் தேதி வெள்ளி ரத தேரோட்டமும், 27- ஆம் தேதி பா்வதவா்த்தினி அம்பாள் தேரோட்டமும், 29- ஆம் தேதி தபசு மண்டகப்படிக்கு எழுந்தருளலும், 30- ஆம் தேதி திருக்கல்யாணமும், ஆகஸ்ட் மாதம் 4- ஆம் தேதி சுவாமி, அம்பாள் கெந்தமாதன பா்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளுதலும் நடைபெறுகிறது.