ராமேசுவரத்தில் ஸ்ரீஆதிசங்கரா் ஜெயந்தி விழா
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடற்கரை அருகே உள்ள சங்கர மடத்தில் ஸ்ரீஆதிசங்கரரின் ஜெயந்தியையொட்டி சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அப்போது கலசத்தில் வைக்கப்பட்டிருந்த புனித நீரால் ஆதிசங்கரருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில், சங்கர மட நிா்வாகிகள், பிராமண சங்கத்தினா் கலந்து கொண்டனா்.