செய்திகள் :

ரூபாய் மதிப்பு 17 காசுகள் உயர்வு! ரூ. 85.40

post image

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, இன்றைய (மே 19) வணிக நேர முடிவில் 17 காசுகள் உயர்ந்து ரூ. 85.40 காசுகளாக நிறைவு பெற்றது.

கடைசி வணிக நாளான கடந்த வெள்ளிக்கிழமை (மே 16) ஒரு காசு உயர்ந்து ரூ. 85.53 காசுகளாக இருந்தது. அதனோடு ஒப்பிடுகையில் இன்றைய வணிக நேர முடிவில் ரூபாய் மதிப்பு 17 காசுகள் உயர்ந்துள்ளது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணியில் இந்திய ரூபாய் மதிப்பு வணிக நேரத் தொடக்கத்தில் 16 காசுகள் உயர்ந்து 85.41 காசுகளாக இருந்தது.

நேர்மறையாகவே வணிகம் தொடங்கிய நிலையில், ஏற்ற இறக்கங்களுக்குப் பிறகு, வணிக நேர முடிவில் 17 காசுகள் உயர்வுடன் ரூ. 85.40ஆக முடிந்தது.

அமெரிக்க கடன் மதிப்பீடு குறைவு மற்றும் இந்திய சந்தைகளில் நிலவிய சீரான வெளிநாட்டு முதலீடு போன்றவை ரூபாய் மதிப்பு உயர்வதற்கான காரணமாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதேபோன்று கச்சா எண்ணெய் விலையும் 0.43 காசுகள் குறைந்து 65.13 டாலர்களாக விற்பனையாகிறது.

இதையும் படிக்க | சரிவுடன் முடிந்த பங்குச் சந்தை! ஐடி துறை பங்குகள் வீழ்ச்சி!

இந்தியாவின் முதல் 5.5ஜி ஸ்மார்ட்போன்! ஜூன் 5-ல் அறிமுகம்

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் ஜூன் 5ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு இந்தியாவில் அறிமுகமாகிறது.பல்வேறு கணிப்புகளுக்கு மத்தியில் ஒன்பிளஸ் 13 எஸ் ஸ்மார்ட்போன், இந்தியாவில் அறிமுகமாகும் தேதி உறுதிய... மேலும் பார்க்க

ஹீரோ அறிமுகப்படுத்தும் மலிவு விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விரைவில் இரண்டு புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை அறிமுகம் செய்யவுள்ளது.புதிதாக அறிமுகம் செய்யப்படவுள்ள ஹீரோ நிறுவனத்தின் விடா மாடல் ஸ்கூட்டர்கள் குறைந்த விலையில் சந்தைக்க... மேலும் பார்க்க

சரிவுடன் முடிந்த பங்குச் சந்தை! ஐடி துறை பங்குகள் வீழ்ச்சி!

வாரத்தின் முதல் வணிக நாளான இன்று (மே 19) பங்குச் சந்தை வணிகம் சரிவுடன் முடிந்தது. சென்செக்ஸ் 271 புள்ளிகளும் நிஃப்டி 24 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழும் சரிந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக... மேலும் பார்க்க

வோடஃபோன் - ஐடியா முடங்கும் அபாயம்! நிதி நெருக்கடியிலிருந்து மீள உச்சநீதிமன்றத்தில் மனு

வோடஃபோன் ஐடியா லிமிடட் (விஐ) தமது நிறுவன பங்குகள் மீதான மொத்த வருவாய் சுமையிலிருந்து விலக்களிக்க உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது.தங்கள் நிறுவனத்துக்கு போதிய நிதியுதவி அல்லது வருவாய் ஆதரவு கிடைக்கவில்லையெ... மேலும் பார்க்க

அந்நிய செலாவணி கையிருப்பு 690.61 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்வு: ரிசர்வ் வங்கி

மும்பை: இந்தியாவில் தங்க கையிருப்பு அதிகரித்ததின் பின்னணியில், மே 9 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பு 4.553 பில்லியன் டாலர்கள் அதிகரித்து 690.617 பில்லியன் டாலர்களாக உயர்... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் 1 காசு உயர்ந்து ரூ.85.53 ஆக முடிவு!

மும்பை: வலுவான அந்நிய வரவுகள் மற்றும் டாலர் குறியீட்டில் ஏற்பட்ட ஓரளவு சரிவு ஆகியவற்றின் பின்னணியில் இன்றைய வர்த்தகத்தில் இந்திய ரூபாய் 1 காசு உயர்ந்து 85.53 ஆக நிறைவடைந்தது.கச்சா எண்ணெய் விலை உயர்வு,... மேலும் பார்க்க