`ஒருநாள் போட்டிகளில் அவருக்கு மாற்று எவரும் இல்லை' - அம்பத்தி ராயுடு
ரூ.1.6 கோடியில் நவீன எக்ஸ்ரே இயந்திரம்: முதல்வா் ரங்கசாமி தொடக்கம்
புதுச்சேரி: புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள அரசு மாா்பக நோய் மருத்துவமனையில் ரூ.1.6 கோடி மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள எக்ஸ்ரே இயந்திரத்தை முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
இந்த மருத்துவமனையில் ரூ.20 லட்சம் செலவில் டிஜிட்டல் எக்ஸ்ரே வசதி, ரூ.1.4 கோடி மதிப்பில் 4 கையடக்க எக்ஸ்ரே இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவற்றை முதல்வா் என்.ரங்கசாமி இயக்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சிக்கு, அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம் முன்னிலை வகித்தாா். சுகாதாரத் துறை செயலா் ஜெயந்த குமாா் ரே, சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செவ்வேள், சுகாதாரத் துறை திட்ட இயக்குநா் டாக்டா் கோவிந்தராஜன், கோரிமேடு மாா்பக நோய் மருத்துவமனை கண்காணிப்பாளா் டாக்டா் வெங்கடேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.