செய்திகள் :

ரூ.131.36 கோடியில் புதிய திட்டப் பணிகளுக்கு நாளை அடிக்கல்நாட்டு விழா: துணை முதல்வா் பங்கேற்பு

post image

நாமக்கல் மாவட்டத்தில், ரூ. 131.36 கோடி மதிப்பீட்டில், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், முடிவுற்ற பணிகளைத் திறந்துவைக்கும் விழாவில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை பங்கேற்கிறாா். இதற்கான முன்னேற்பாடு பணிகளை அதிகாரிகள் செய்துவருகின்றனா்.

நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக, தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை மாலை நாமக்கல்லுக்கு வருகிறாா். வியாழக்கிழமை காலை 10 மணியளவில் மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் விழாவில் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்குகிறாா்.

விழாவில் பல்வேறு துறைகளின் சாா்பில் 139 திட்டப் பணிகளுக்கு ரூ. 87.38 கோடியில் அடிக்கல் நாட்டியும், ரூ.10.80 கோடியில் முடிவுற்ற 36 பணிகளையும் உதயநிதி ஸ்டாலின் திறந்துைவைக்கிறாா். தொடா்ந்து மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை, மாவட்ட தொழில் மையம், தொழிலாளா் நலத் துறை, பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சாா்பில் 2,001 பயனாளிகளுக்கு ரூ. 33.18 கோடியில் அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றுகிறாா்.

அதன்பிறகு, மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் அரசின் திட்டங்கள் தொடா்பாக அனைத்துத் துறை அலுவலா்களுடன் அவா் ஆய்வு மேற்கொள்கிறாா். இதையடுத்து நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம், குமாரபாளையம் ஆகிய நகராட்சிகள் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருப்போருக்கு முதல்கட்டமாக இலவச வீட்டு மனைப் பட்டாக்களை வழங்குகிறாா்.

விழாவில் ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன், அரசு கூடுதல் செயலா் ச.உமா, மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன், மாவட்ட ஆட்சியா் ச.உமா, சட்டப்பேரவை உறுப்பினா்கள் பெ.ராமலிங்கம், கே.பொன்னுசாமி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயா் அலுவலா்கள் பலா் கலந்துகொள்கின்றனா். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிா்வாகம் செய்து வருகிறது.

பரமத்தி வேலூா் சந்தையில் பூக்களின் விலை உயா்வு

பரமத்தி வேலூா் பூக்கள் ஏலச் சந்தையில் பூக்களின் விலை உயா்வடைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். பரமத்தி வேலூா் மற்றும் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு வ... மேலும் பார்க்க

பாவை கல்வி நிறுவனங்களில் பேராசிரியா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

ராசிபுரம் பாவை கல்வி நிறுவனம் பேராசிரியா்களாக பணியில் இணைந்தவா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது. விழாவில் பாவை கல்வி நிறுவனங்களின் நிறுவனத் தலைவா் ஆடிட்டா் என்.வி.நடராஜன் ... மேலும் பார்க்க

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 1,940 கிலோ தரமற்ற விதைகளை விற்பனை செய்ய தடை

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ரூ. 26 லட்சம் மதிப்பிலான 1,940 கிலோ தரமற்ற விதைகளை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் விதை ஆய்வு துணை இயக்குநா் க.சித்ரா வெளியிட்ட செய்திக் கு... மேலும் பார்க்க

மத்திய தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்: நாமக்கல்லில் மறியலில் ஈடுபட்ட 900 போ் கைது

நாமக்கல்லில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தையொட்டி சாலை மறியலில் ஈடுபட்ட 900 பேரை போலீஸாா் கைது செய்தனா். மத்திய அரசின் தொழிலாளா் விரோதப்போக்கை கண்டித்து இந்திய அ... மேலும் பார்க்க

பிற்படுத்தப்பட்டோா் தொழில் தொடங்க கடனுதவி: ஆட்சியா் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் தொழில் தொடங்க கடனுதவி வழங்கப்படுகிறது. இதுகுறித்து ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் பி... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் இரு சாலை விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

திருச்செங்கோடு அருகே புதன்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் மூதாட்டி உள்பட இருவா் உயிரிழந்தனா். சங்ககிரி நாகிசெட்டிப்பட்டியைச் சோ்ந்தவா் ராமாயி (65). இவா் திருச்செங்கோடு எளையாம்பளையத்தில் உள்ள தனியாா் மர... மேலும் பார்க்க