வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
``ரூ.30,000 லஞ்சம் கொடுத்தால் தான் வீடு கட்ட அனுமதிக்க முடியும்'' - கையும் களவுமாக சிக்கிய அதிகாரி
சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரியில் அரசு மற்றும் தனியார் தரப்பில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள பல்வேறு கட்டுப்பாடுகளும் தடைகளும் நடைமுறையில் இருக்கிறது. தடைசெய்யப்பட்ட கனரக இயந்திர பயன்பாட்டுக்கான அனுமதி மற்றும் காட்டேஜ் கட்டுமான அனுமதிகளை லஞ்சம் வாங்கிக்கொண்டு வழங்குவதாக வருவாய்த்துறையைச் சேர்ந்த சிலர் மீது தொடர் புகார்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், குன்னூர் அருகில் உள்ள ஜெகதளா பேரூராட்சி பகுதியில் வசித்து வரும் நபர் ஒருவர் வீடு கட்டுவதற்காக முறையாக விண்ணப்பம் செய்துள்ளார். ஆனால், 30,000 ரூபாய் லஞ்சமாக கொடுத்தால் மட்டுமே அனுமதி வழங்க நடவடிக்கை எடுப்பதாக அந்த பேரூராட்சியின் செயல் அலுவலர் சரவணராஜ் கேட்டிருக்கிறார்.
கோபமடைந்த அந்த நபர் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்துள்ளார். அப்போது, சம்மந்தப்பட்ட நபரிடம் லஞ்சம் வாங்கிய செயல் அலுவலரை கையும் களவுமாக கைது செய்துள்ளனர்.
பின்னணி குறித்து தெரிவித்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், "வீடு கட்ட அனுமதி கேட்டு காத்திருந்த ஜெகதளா பேரூராட்சியைச் சேர்ந்த சுபாஷ் ராஜ்குமார் என்பவரிடம் செயல் அலுவலர் சரவணராஜ் 30 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டிருக்கிறார். சம்மந்தப்பட்ட நபரிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினோம். பேரூராட்சி அலுவலகத்தில் நேற்றிரவு சரணவனராஜ் லஞ்சம் வாங்கும் போது ஆதாரத்துடன் பிடித்தோம். அவர்மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளோம். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...