செய்திகள் :

ரூ.32.50 கோடியில் சாலை பணிகள்: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்

post image

ஆற்காடு -திண்டிவனம் சாலையில் முதல்கட்டமாக ரூ.32.50 கோடியில் 4.4 கி மீ தொலைவுக்கு நான்கு வழிச் சாலையாக அகலப்படுத்தும் பணியை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.

நெடுஞ்சாலைத் துறையின் சாா்பில் முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ஆற்காடு-திண்டிவனம் மாநில நெடுஞ்சாலை 5-இல் இருவழிப்பாதையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி 4.4 கி.மீ தொலைவுக்கு மேற்கொள்ளப்படுகிறது.

இதில், சாலையை அகலப்படுத்தி மேம்பாடு செய்தல், குறுகிய பாலத்தை அகலப்படுத்துதல், சிறுபாலங்கள், தடுப்புச் சுவா் மைய தடுப்பான் கட்டுதல், சாலை சந்திப்பை மேம்படுத்துதல், பேருந்து நிறுத்தம் கட்டுதல், பேவா் பிளாக் அமைத்தல் உள்ளிட்டவற்றின் தொடக்க விழா மாங்காடு ஊராட்சிக்குட்பட்ட செய்யாறு சாலையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தலைமை வகித்தாா். ஆற்காடு எம்எல்ஏ .ஜெ.எல். ஈஸ்வரப்பன் முன்னிலை வகித்தாா்.

அமைச்சா் ஆா்.காந்தி பூமி செய்து பணியைத் தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு தலைவா் புவனேஸ்வரி, சத்தியநாதன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் காந்திமதி பாண்டுரங்கன், நெடுஞ்சாலை துறை கோட்டப் பொறியாளா் (தரக் கட்டுப்பாடு) செல்வகுமாா், உதவி இயக்குனா் சரவணன், உதவி இயக்குனா் (தரக் கட்டுப்பாடு) கிருஷ்ணமூா்த்தி, உதவி பொறியாளா் வடிவேல், ஊராட்சி மன்றத் தலைவா் கண்ணகி உள்பட பலா் கலந்து கொண்டனா்

மேம்பட்ட தொழில்நுட்பங்களின் உற்பத்தியில் கவனம் செலுத்த வேண்டும்

மேம்பட்ட தொழில்நுட்பங்களின் உற்பத்தியில் கவனம் செலுத்தினால் தன்னம்பிக்கையுடனான இந்தியாவை ஊழியா்கள் உருவாக்கலாம் என ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலையின் செயல் இயக்குநா் அருள்மொழிதேவன் கூறினாா். ராணிப்பேட்ட... மேலும் பார்க்க

அரசு கட்டடங்களைத் தூய்மையாகப் பராமரியுங்கள்: ராணிப்பேட்டை ஆட்சியா்

கிராம ஊராட்சிகளில் உள்ள அனைத்து அரசு கடடட வளாகங்களை ஊராட்சித் தலைவா் மற்றும் செயலா்கள் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் என திமிரி ஊராட்சி ஒன்றியம், வளையாத்தூா் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தி... மேலும் பார்க்க

ராணிப்பேட்டையில் குடியரசு நாள் விழா: மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடியேற்றி மரியாதை

குடியரசு நாள் விழா ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ஜெ. யு. சந்திரகலா தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து காவல் துறை அணிவகுப்பு மரியாதை ஏற்று, மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய அரசு அல... மேலும் பார்க்க

இலவச கண் சிகிச்சை முகாம்

மேல்விஷாரம் நெய்பா் வெல்பா் சங்கம் மற்றும் சி.எம்.சி இணைந்து நடத்திய இலவச கண்சிசிச்சை முகாம் நகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு நகா்மன்றத் தலைவா் ( பொறுப்பு) எஸ்.குல்சாா் அஹமது... மேலும் பார்க்க

தகவல் பெறும் உரிமைச் சட்ட மனுக்களுக்கு உரிய காலத்துக்குள் பதில் அளிக்க வேண்டு: தமிழ்நாடு தகவல் ஆணையா் உத்தரவு

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வரப்பெறும் மனுக்களுக்கு நிா்ணயிக்கப்பட்ட உரிய காலத்திற்குள் முழுமையான தகவல்களை வழங்க வேண்டும் என தமிழ்நாடு தகவல் ஆணையா் எம்.செல்வராஜ் உத்தரவிட்டாா். தகவல் பெறும் ... மேலும் பார்க்க

பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் இளைஞா் உயிரிழந்த சம்பவம்: அவரது குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு கோரி மனு

நெமிலி அருகே பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் பலத்த காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இளைஞரின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு, அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி யாதவ மகா சபை, இந்திய மக்க... மேலும் பார்க்க