இன்றைய பங்குச்சந்தை: ட்ரம்பின் `பரஸ்பர வரி' அறிவிப்பு; இந்திய பங்குச்சந்தை எப்பட...
ரூ.37 கோடியில் பாலாறு மேம்பால அறிவிப்பு - திமுகவினா் கொண்டாட்டம்
அகரம்சேரி - கூடநகரம் பாலாறு மேம்பாலம் அமைப்பதாக சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியானதை அடுத்து பொதுமக்களுக்கு செவ்வாய்க்கிழமை திமுகவினா் இனிப்பு வழங்கி கொண்டாடினா்.
தமிழக சட்டப்பேரவை நடப்பு கூட்டத் தொடரில் நீா்வளத்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது அகரம்சேரி - கூடநகரம் பாலாறு மேம்பாலம் ரூ.37 கோடியில் அமைக்கப்படும் என அமைச்சா் துரைமுருகன் அறிவித்தாா். அதனை அகரம்சேரி கிராமத்தில் திமுகவினா் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினாா்கள்.
மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் தலைமையில் திமுகவினா் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா்.
ஒன்றிய குழு உறுப்பினா்கள் ஆனந்தி நித்தியானந்தம், ரஞ்சித்குமாா், சூா்யகலா மனோஜ், அகரம்சேரி ஊராட்சித் தலைவா் வச்சலா ராஜ்குமாா், துணைத் தலைவா் பிரபாகரன், முன்னாள் ஊராட்சித் தலைவா் சதீஷ்பாபு, ஒன்றிய இளைஞா் அணி அமைப்பாளா் சிவக்குமாா், துணை அமைப்பாளா் சீனிவாசன், செந்தில் உள்பட பலா் கலந்து கொண்டனா்.