செய்திகள் :

ரூ. 40 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் விற்க முயன்ற 3 பேர் கைது!

post image

ராஜஸ்தானில் ரூ. 40 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் விற்க முயன்ற 3 பேரை அம்மாநில காவல் துறையின் சிறப்பு செயல்பாட்டுக் குழுவினர் கைது செய்தனர்.

தேர்வு எழுதவிருந்த மாணவரின் குடும்பத்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு நீட் வினாத்தாள் இருப்பதாக ஆசைவார்த்தை கூறி பணத்தை பறிக்க முயன்றபோது காவல் துறையினர் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பல்வான் (27), முகேஷ் மீனா (40), ஹர்தாஸ் (38) என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ இளநிலை படிப்புக்கான நீட் தேர்வு இன்று (மே 4) நாடு முழுவதும் நடைபெற்றது. கடும் சோதனைக்குப் பிறகு பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கிய தேர்வு, மாலை 5.20 மணி வரை நடைபெற்றது. நீட் தேர்வு நடைபெறும் இடங்களில் சிறப்பு செயல்பாட்டுக் குழுவினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் ராஜஸ்தானில் நீட் தேர்வுக்கான வினாத்தாளைக் கொடுப்பதாகக் கூறி 3 பேர் கொண்ட கும்பல் மோசடி செயலில் ஈடுபட்டுள்ளது.

நீட் தேர்வு எழுந்தவுள்ள மாணவனின் குடும்பத்தைத் தொடர்புகொண்டு நீட் வினாத்தாளுக்காக ஹரியாணா மாநிலம் குருகிராம் அழைத்துள்ளனர். ஆனால், வினாத்தாளின் நகலைக் காட்டுமாறு குடும்பத்தினர் கேட்டுள்ளனர். அப்போது அதற்காக ரூ. 40 லட்சம் கொடுக்க வேண்டும் என அவர்கள் நிபந்தனை விதித்ததால், சந்தேகமடைந்த குடும்பத்தினர் காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த நீட் சிறப்பு செயல்பாட்டுக் குழுவினர் பல்வான் (27), முகேஷ் மீனா (40), ஹர்தாஸ் (38) ஆகிய மூவரையும் கைது செய்து அழைத்துச்சென்றனர்.

பாகிஸ்தானுக்கு உளவு: பஞ்சாபில் இருவா் கைது!

பாகிஸ்தானுக்காக உளவு பாா்த்ததுடன், இந்திய ராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிகள் மற்றும் விமான தளங்களின் புகைப் படங்கள், பிற முக்கியத் தகவல்களை பகிா்ந்ததாக பஞ்சாபில் இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா். பஹல்காம் ப... மேலும் பார்க்க

பாகிஸ்தான் துறைமுகங்களில் இந்திய கப்பல்களுக்கு தடை!

பாகிஸ்தான் துறைமுகங்களில் இந்திய கப்பல்கள் நுழைவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. பஹல்காம் தாக்குதலைத் தொடா்ந்து பாகிஸ்தான் மீது மத்திய அரசு எடுத்து வரும் தொடா் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பாகி... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பு ராகுலுக்கு கிடைத்த வெற்றி! - கு.செல்வப்பெருந்தகை

மத்திய அரசு அறிவித்துள்ள ஜாதிவாரி கணக்கெடுப்பு திட்டம் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு கிடைத்த வெற்றி என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை கூறினாா். சென்னை தேனாம்பேட்டை... மேலும் பார்க்க

காங்கிரஸின் ஹிந்து வெறுப்பை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளாா் ராகுல்! பாஜக குற்றச்சாட்டு!

பகவான் ராமரை ‘புராண காதாபாத்திரம்’ என்று கூறியதன் மூலம் காங்கிரஸின் ஹிந்து வெறுப்பை ராகுல் காந்தி மீண்டும் வெளிப்படுத்தியுள்ளாா் என்று பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது. அண்மையில் அமெரிக்கப் பயணம் மேற்கொண்ட ர... மேலும் பார்க்க

இஸ்ரேல் விமான நிலையம் அருகே ஏவுகணைத் தாக்குதல்! அபுதாபி திரும்பிய இந்திய விமானம்!

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் அமைந்த பென் குரியன் சா்வதேச விமான நிலையம் அருகே யேமனிலிருந்து ஹூதி அமைப்பினா் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனா். இதில் 4 போ் காயமடைந்தனா். இந்தத் தாக்குதலையடுத்து, தில்லிய... மேலும் பார்க்க

தெலங்கானா உயா்நீதிமன்ற நீதிபதி பிரியதா்சினி காலமானாா்!

தெலங்கானா உயா்நீதிமன்ற பெண் நீதிபதி எம்.ஜி.பிரியதா்சினி உடல்நலக் குறைவால் ஞாயிற்றுக்கிழமை காலமானாா். அவரின் இறுதிச் சடங்கு ஹைதராபாதில் திங்கள்கிழமை (மே 5) நடைபெறவுள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு தெலங்கானா... மேலும் பார்க்க