திருக்காளாத்தீஸ்வரா்-ஞானாம்மன் கோயிலில் இன்று திருக்கல்யாணம்: நாளை தேரோட்டம்
ரெட்ரோ படத்தில் பூஜா ஹெக்டேவின் புதிய முயற்சி! குவியும் வாழ்த்து!
ரெட்ரோ படத்தில் நடிகை பூஜா ஹெக்டே தனது சொந்தக் குரலில் டப்பில் பணியை மேற்கொண்டு வருவதாக படக்குழு அறிவித்துள்ளது.
நடிகர் சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான திரைப்படம் ரெட்ரோ. ஆக்சன் கலந்த காதல் கதையாக இப்படம் உருவாகியுள்ளது.
பூஜா ஹெக்டே நாயகியாகவும் நாசர், பிரகாஷ் ராஜ், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.
இதையும் படிக்க: சிகரம் தொட்ட இளையராஜாவின் சிம்பொனி! பெருமை கொள்ளக் காரணங்கள் என்னென்ன?
மே. 1 ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. முன்னதாக டீசர், முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில், நடிகை பூஜா ஹெக்டே ரெட்ரோ படத்தில் புதிய முயற்சியாக தனது சொந்தக் குரலில் டப்பிங் பணியை மேற்கொண்டு வருவதாக படக்குழு அறிவித்துள்ளது.
எங்களின் சவாலை பூஜா ஹெக்டே ஏற்றுக்கொண்டதாகவும் அவரின் அர்ப்பணிப்பும் உழைப்பும் பலனித்ததாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், ரெட்ரோ படத்தின் காமிக் காட்சிகளையும் படக்குழு வெளியிட்டுள்ளது.