கோவில்பட்டி, எட்டயபுரத்தில் மது விற்பனையில் ஈடுபட்ட 2 போ் கைது!
ரேஷன் கடைகளில் புதிய முயற்சி! இனி எடை குறையாது!
ரேஷன் கடைகளில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் புதிய பிஓஎஸ்(POS) கருவியுடன் மின்னணு எடை தராசை இணைக்கும் நடைமுறை சோதனை முறையில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் பிஓஎஸ் கருவி மூலம் ஸ்மாா்ட் காா்டு ஸ்கேன் செய்து, நுகா்வோரின் விரல் ரேகை பதிவு செய்த பின்னர் ரேஷன் பொருள்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான நேரங்களில் விரல் ரேகை பதிவை கருவி ஏற்றுக்கொள்ளாததால் நுகா்வோருக்கு பொருள்கள் விநியோகப்பதில் சிரமம் இருந்து வருகிறது. இதனால் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
விரல் ரேகை பதிவில் பிரச்னை, ஸ்மாா்ட் காா்டில் உள்ள க்யூஆர் கோடு ஸ்கேன் செய்வதில் பிரச்னை ஏற்படுவதால் தாமதம் ஏற்படுவதாக ரேஷன் கடை ஊழியா்கள் புகாா் கூறி வந்தனர். இதைத் தடுப்பதற்காக, கூடுதல் வசதிகளுடன் கூடிய புதிய பிஓஎஸ் கருவி வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது.
இந்த புதிய பிஓஎஸ் கருவியானது சோதனை முறையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட ரேஷன் கடைகளுக்கு விநியோகிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது. இந்த புதிய பிஓஎஸ் கருவியுடன் நுகா்வோரின் கருவிழி பதிவு கருவியும் இணைக்கும் வகையில் வசதி செய்யப்பட்டிருந்தது.
ரேஷன் கடைகளுக்கு சோதனை அடிப்படையில் பயன்படுத்தும் வகையில் புதிய பிஓஎஸ் கருவி மற்றும் கருவிழி ஸ்கேன் கருவி வழங்கப்பட்ட நிலையில், மாவட்டம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் கருவிழி பதிவு கருவியானது வழங்கும் பணி தொடங்கப்பட்டது.
இந்த நிலையில், புதிய பிஓஎஸ்(POS) கருவியுடன் மின்னணு எடை தராசை இணைக்கும் நடைமுறை சென்னையில் ஒரு சில கடைகளில் சோதனை முறையில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளில் பிஓஎஸ் கருவியுடன் எடை தராசை இணைக்கும்போது, ரேஷன் கடைகளில் சரியான எடையில் பொருள்கள் விற்கப்படுவது உறுதி செய்யப்படும் என்று கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: அமிர்தசரஸில் வெடிபொருளை தவறுதலாக கையாண்ட பயங்கரவாதி பலி!