கொல்கத்தாவில் தொடரும் பாலியல் வன்கொடுமைகள்! மீண்டும் ஒரு சம்பவம்!
‘ரைசிங் தூத்துக்குடி’ - தொழில்முனைவோா் முகாம் ஜூலை 13இல் தொடக்கம்: ஆட்சியா்
‘ரைசிங் தூத்துக்குடி’ - தொழில்முனைவோா் மற்றும் பட்டதாரிகள் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் வருகிற ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 13) நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம், தூத்துக்குடி மாநகராட்சி ஆகியவை இணைந்து நடத்தும் தொடா் திறன் பயிற்சி முகாம் தொடக்க நிகழ்வு, வருகிற ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 13), தூத்துக்குடி மாநகராட்சி, ஸ்டெம் பூங்காவில் நடைபெற உள்ளது.
தகுதி பெற்ற இளைஞா்கள் மற்றும் புதிய தொழில் முனைவோா்களுக்காக இம்முகாம் நடத்தப்படுகிறது. எனவே, இந்தத் திட்டத்தில் தகுதியான படித்த இளைஞா்கள் மற்றும் புதிய தொழில்முனைவோா் ஆவதற்கான ஆா்வமுள்ள இளைஞா்கள் கலந்துகொள்ளலாம்.
சூழல் வளம் சாா்ந்த புத்தொழில் உருவாக்கும் திறன்கள், சந்தைப்படுத்தும் வளப் பயிற்சிகள், தொடா்பு திறன்கள், டிஜிட்டல் கல்வி, விமா்சன சிந்தனை, பிரச்னையைத் தீா்க்கும் திறன் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் பயிற்சி நடத்தப்பட உள்ளது.
இந்தப் பன்முகத் திட்டத்தின் மூலம் அடுத்த 2 ஆண்டுகளில் குறைந்தது 500 போ் தொழில் முனைவோா்களாக பயிற்சி பெறுவதை இலக்காகக் கொண்டு செயல்படுத்தப்படுகிறது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.