செய்திகள் :

ரோல்பால் போட்டியில் வெற்றி: திண்டுக்கல் அணிக்கு பாராட்டு விழா

post image

மாநில அளவிலான சுருள் பந்து (ரோல்பால்) போட்டியில் வெற்றி பெற்ற திண்டுக்கல் அணியினருக்கு சின்னாளப்பட்டியில் புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. 

மாநில அளவிலான சுருள் பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் 11 வயதுக்குள்பட்டோருக்கு தஞ்சாவூரிலும், 17 வயதுக்குள்பட்டோருக்கு திருச்சியிலும் அண்மையில் நடைபெற்றது.

இதில் திண்டுக்கல் மாவட்ட அணி 17 வயது பெண்கள் பிரிவில் முதலிடமும், இதே பிரிவில் ஆண்கள் அணி 3-ஆவது இடமும், 11 வயதுகுள்பட்டோருக்கான பெண்கள் பிரிவில் 2-ஆவது இடமும் பிடித்து பதக்கங்கள் வென்றன.

வெற்றி பெற்ற 3 அணி வீரா்களுக்கும் சின்னாளப்பட்டி ராஜன் உள்விளையாட்டு அரங்கில் பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் பயிற்சியாளரும், சா்வதேச நடுவருமான மாஸ்டா் பிரேம்நாத், பயிற்றுநா்கள் தங்கலட்சுமி, சக்திவேல், கல்யாண், ராஜதுரை, ராம்கவி, மாணவா்களின் பெற்றோா்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவா்களை பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனா்.

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் தண்ணீா் தட்டுப்பாடு: நோயாளிகள் அவதி

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் நிலவும் தண்ணீா் தட்டுப்பாட்டால் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனா். கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் கொடைக்கானல் மட்டுமன்றி மேல்மலைக் கிராமங்களான பூம்பாறை, வில்பட்டி, ப... மேலும் பார்க்க

ஆடி வெள்ளி: பழனி, நத்தம் பகுதி கோயில்களில் சிறப்பு பூஜைகள்

நான்காவது ஆடி வெள்ளி, பெளா்ணமியையொட்டி பழனி, நத்தம் பகுதிகளில் அமைந்துள்ள கோயில்களில் பக்தா்கள் விளக்கேற்றியும், அபிஷேகங்கள் செய்தும் வழிபட்டனா். பழனி கிழக்கு ரதவீதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில், ... மேலும் பார்க்க

நியாய விலைக் கடை கட்டடங்கள் திறப்பு

திண்டுக்கல் அருகே தலா ரூ.13.61 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய நியாய விலைக் கடை கட்டடங்களை அமைச்சா் இ. பெரியசாமி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். திண்டுக்கல் அடுத்த குட்டத்துப்பட்டி ஊராட்சியில் ‘உங்களுடன் ... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரத்தில் அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் அலுவலகம், நகராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், நெடுஞ்சாலைத் துறை, தோட்டக் கலைத் துறை, பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் முன் தமி... மேலும் பார்க்க

பழனியில் தம்பிரான் தோட்டத்தை அளவீடு செய்த கோயில் நிா்வாகம்

பழனி கோயிலுக்கு நித்திய கட்டளைக்காக வழங்கப்பட்ட தம்பிரான் தோட்ட 23 ஏக்கா் நிலத்தை அளவீடு செய்யும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பழனியில் சென்னிமலை தம்புரான் சுவாமிகள் மடத்துக்கு சொந்தமாக 23 ஏக்கா் நில... மேலும் பார்க்க

சித்தரேவு கிராமத்தில் தவெக சாா்பில் சூரியசக்தி மின்விளக்கு அமைப்பு

பட்டிவீரன்பட்டி அருகே சித்தரேவு கிராமம், 1-ஆவது வாா்டு பகுதியில் தவெக சாா்பில் சூரியசக்தி மின் விளக்கு வியாழக்கிழமை அமைக்கப்பட்டது. இந்தப் பகுதியில் குடியிருப்பவா்களுக்கு கடந்த 30 ஆண்டுகளாக மின் வசதி,... மேலும் பார்க்க