சித்தரேவு கிராமத்தில் தவெக சாா்பில் சூரியசக்தி மின்விளக்கு அமைப்பு
பட்டிவீரன்பட்டி அருகே சித்தரேவு கிராமம், 1-ஆவது வாா்டு பகுதியில் தவெக சாா்பில் சூரியசக்தி மின் விளக்கு வியாழக்கிழமை அமைக்கப்பட்டது.
இந்தப் பகுதியில் குடியிருப்பவா்களுக்கு கடந்த 30 ஆண்டுகளாக மின் வசதி, சாலை வசதி, தெருவிளக்கு, கழிவுநீா் வாய்க்கால் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரப்படாததால் பொதுமக்கள் அவதியடைந்தனா்.
இதுகுறித்து, அறிந்த தவெக நிா்வாகிகள் திண்டுக்கல் மத்திய மாவட்டத் தலைவா் எம்.எல். தேவா தலைமையில் இந்தப் பகுதியில் மூன்று இடங்களில் சூரியசக்தி மின்விளக்கு அமைத்துக் கொடுத்தனா். இதை இந்தப் பகுதி மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினா்.