பாட நூல்கள் மாற்றம், மதிப்பீட்டுச் சீா்திருத்தம், வீடுதோறும் வகுப்பறை! மாநில கல்...
நியாய விலைக் கடை கட்டடங்கள் திறப்பு
திண்டுக்கல் அருகே தலா ரூ.13.61 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய நியாய விலைக் கடை கட்டடங்களை அமைச்சா் இ. பெரியசாமி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
திண்டுக்கல் அடுத்த குட்டத்துப்பட்டி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்‘ திட்ட முகாம் நடைபெற்றது. இதில் ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ. பெரியசாமி கலந்து கொண்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டாா். இதைத் தொடா்ந்து, குட்டத்துப்பட்டி, மைலாப்பூா் ஆகிய கிராமங்களில் தலா ரூ.13.61 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலைக் கடை கட்டடங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அமைச்சா் திறந்து வைத்தாா்.
அப்போது அவா் பேசியதாவது: கனவு இல்லம் திட்டத்தின் கீழ், திண்டுக்கல் மாவட்டத்தில் 10 ஆயிரம் வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பழுதடைந்த வீடுகளை சீரமைக்கும் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் வீடுகளில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சி. குருமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.