லாரியஸ் 2025 விருதுகள்: ரிஷப் பந்த் தேர்வாகவில்லை, லாமின் யமால், ரஃபேல் நடாலுக்கு விருது!
இங்கிலாந்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் லாரியஸ் அமைப்பு லாரியஸ் விருதுக்கான போட்டியாளா்களின் பெயா்களை சா்வதேச அளவில் விளையாட்டுத்துறை சாா்ந்த ஊடகங்கள் பரிந்துரைக்கின்றன.
லாரியஸ் உலக விளையாட்டு அகாதெமியை சோ்ந்த 71 உறுப்பினா்கள் வாக்களிப்பதன் அடிப்படையில் இதன் வெற்றியாளா்கள் தோ்வு செய்யப்படுகின்றனா்.
இந்தப் போட்டியில் பல்வேறு விளையாட்டைச் சேர்ந்த வீரர்கள் தேர்வாகியுள்ளனர்.
இந்தியாவின் சார்பில் ரிஷப் பந்த் பரிந்துரைக்கப்பட்டு தேர்வாகாமல் சென்றார்.
லாரியல் 2025 விருது வென்றவர்கள்
சிறந்த வீரர்- மாண்டோ டுப்லண்டிஸ்
சிறந்த வீராங்கனை - சிமோனே பைல்ஸ்
சிறந்த அணி - ரியல் மாட்ரிட்
முக்கியமான கண்டுபிடிப்பு - லாமின் யமால்
சிறந்த கம்பேக் - ரெபேக்கா ஆண்ட்ரே
மாற்றுத்தினாளிகளின் சிறந்த வீரர் - ஜியாங் யுவன்
சிறந்த ஆக்ஷன் வீரர் - தாமஸ் பிட்காக்
நல்ல விளையாட்டுக்கான அணி - கிக்4லைஃப்
விளையாட்டுக்கான அடையாளம் - ரஃபேல் நடால்
வாழ்நாள் சாதனையாளர் - கெல்லி ஸ்லாடர்
கடந்த காலங்களில் சிறந்த வீரர்கள் விருதுவென்றவர்கள்
2024- நோவக் ஜோகோவிச்
2023 - லியோனல் மெஸ்ஸி
2022 - மாக்ஸ் வெர்ஸ்டாப்பேன்
2021 - ரஃபேல் நடால்
2020 - லியோனல் மெஸ்ஸி, லெவிஸ் ஹாமில்டன்