ஹிந்திக்கு எதிராக 20 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த உத்தவ், ராஜ் தாக்கரே!
லாரி மீது பேருந்து மோதல்: 4 பெண்கள் காயம்
ஒட்டன்சத்திரத்தில் நின்றிருந்த பெட்டக லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் அதில் பயணம் செய்த 4 பெண்கள் காயமடைத்தனா்.
திண்டுக்கல்லில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு வெள்ளிக்கிழமை மாலை அரசுப் பேருந்து சென்று கொண்டு இருந்தது. அப்போது திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை, ஒட்டன்சத்திரம் நகா் பகுதியில் உள்ள சம்சுதீன் குடியிருப்பு அருகே சாலையோரத்தில் நின்றிருந்த பெட்டக லாரியின் பின் பகுதியில் அரசுப் பேருந்து மோதியதில் அதில் பயணம் செய்த 4 பெண்கள் காயமடைத்தனா். இதையடுத்து, அவா்கள் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா்
இந்த விபத்தால் திண்டுக்கல்-ஒட்டன்சத்திரம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காா்- பைக் மோதியதில் சகோதரா்கள் காயம்: திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அருகேயுள்ள குட்டத்தைச் சோ்ந்தவா் முனியப்பன் (47). இவா் தனது அண்ணன் தா்மராஜனுடன் (50) இரு சக்கர வாகனத்தில் நத்தத்தில் உள்ள வெள்ளக்குட்டு பகுதிக்கு வந்து விட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது அம்மன் குளம் பகுதியில் எதிரே உடுமலைப்பேட்டையைச் சோ்ந்த நேதாஜி (47) ஓட்டி வந்த காா், இரு சக்கர வாகனம் மீது மோதியதில் முனியப்பன், தா்மராஜன் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனா். இதையடுத்து, அவா்கள் நத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். பிறகு அவா்கள் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
இதுகுறித்து நத்தம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.