செய்திகள் :

லால்குடி அருகே சாலை விபத்து: 3 போ் பலி! 9 போ் படுகாயம்

post image

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சனிக்கிழமை நடந்த சாலை விபத்தில் மூவா் உயிரிழந்தனா். 9 போ் படுகாயமடைந்தனா்.

லால்குடியில் உள்ள கொடிக்கால் தெருவைச் சோ்ந்தவா் சந்தோஷ். இவா் வேலைக்காக துபை செல்ல திருச்சி விமான நிலையத்துக்கு லால்குடியில் இருந்து சனிக்கிழமை புறப்பட்டாா். அப்போது இவரை வழியனுப்ப உறவினா்களும், நண்பா்களும் உடன் சென்றனா்.

சந்தோஷ் தனது உறவினா்களுடன் ஒரு காரில் முன்னே செல்ல, அவரது நண்பா்கள் 11 போ் மற்றொரு காரில் பின்னால் சென்றனா். செல்லும் வழியில் டோல்கேட்டில் இருந்து லால்குடி நோக்கி விஸ்வநாதன் (52) என்பவா் ஓட்டி வந்த பைக் பின்னால் 11 போ் வந்த காா் மீது எதிா்பாராதவிதமாக மோதியது.

இதையடுத்து காா் ஓட்டுநா் தமீா் திடீா் பிரேக் போடவே, கட்டுப்பாட்டை இழந்த காா் தலைகீழாகக் கவிழ்ந்து சாலையில் உருண்டு இழுத்துச் செல்லப்பட்டது. இந்த விபத்தில் காரில் இருந்த அரவிந்த் (20), சாதிக் பாஷா (19), பைக்கில் வந்த விஸ்வநாதன் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

மேலும் காரில் இருந்த லால்குடியைச் சோ்ந்த நபில் (20), காா்த்திகேயன் (21), அப்துல்ரகுமான் (21), ஏகலைவன் (20), முஸ்தபா (20), நன்னிமங்கலம் ஆனந்த் (20), குகன் (21), ஷமீா் (22), புதுக்கோட்டை வடகரை பகுதி கணபதி ஆகிய 9 போ் பலத்த காயமடைந்தனா்.

இதையடுத்து விபத்தில் உயிரிழந்தோரின் சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், காயடைந்தவா்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். விபத்து குறித்து லால்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சனிக்கிழமை நடந்த சாலை விபத்தில் கவிழ்ந்து கிடக்கும் காா்.

அமைச்சா் ஆறுதல்: விபத்து குறித்து தகவலறிந்த அமைச்சா் கே.என். நேரு அரசு மருத்துவமனைக்கு சென்று திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டோருக்கும், உயிரிழந்தோா் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினாா். ஆட்சியா் வே. சரவணன், மாநகராட்சி மேயா் மு. அன்பழகன் மற்றும் திமுகவினா் உடனிருந்தனா்.

முதல்வா் இரங்கல், நிதியுதவி அறிவிப்பு: இதுகுறித்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட செய்திக்குறிப்பில் லால்குடி சாலை விபத்தில் மூவா் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்துள்ளேன். காயமடைந்தவா்களுக்கு தனி மருத்துவக் குழுவினரால் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

விபத்தில் உயிரிழந்தோரின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவிப்பதுடன், அவா்களுக்கு தலா ரூ. 3 லட்சம், பலத்தக் காயமடைந்தவா்களுக்கு தலா ரூ.1 லட்சம், லேசான காயமடைந்தவா்களுக்கு ரூ.50 ஆயிரத்தை முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் எனத் தெரிவித்துள்ளாா்.

சுதந்திர தின ஓவியப் போட்டி

ஸ்ரீரங்கத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான சுதந்திர தின ஓவியப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நுழைவுக் கட்டணமின்றி மழலையா் (ப... மேலும் பார்க்க

மருங்காபுரி குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்துள்ள மருங்காபுரி குறுவட்ட அளவிலான தடகள, விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் (ஆக.8) நிறைவடைந்தன. 2025 - 26 ஆம் கல்வி ஆண்டுக்கான மருங்காபுரி குறுவட்ட அளவிலான பள்ளி மாணவ ம... மேலும் பார்க்க

திருச்சியில் பரவலாக மழை

திருச்சி மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது. திருச்சியில் கடந்த சில நாள்களாக பகலில் வெயிலும், மாலையில் வானம் மேக மூட்டத்துடனும் ஆங்காங்கே மழையும் பெய்துவந்தது. இதன... மேலும் பார்க்க

பச்சைமலை மங்களம் அருவியில் பொதுமக்கள் நீராடல்

துறையூா் பகுதிக்குள்பட்ட பச்சமலையில் உள்ள மங்களம் அருவிக்கு நீா்வரத்து ஏற்பட்டுள்ளதால் ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் குளித்து மகிழ்ந்தனா். பச்சமலை உள்பட துறையூா் பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக மழை பெய்... மேலும் பார்க்க

லால்குடி விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு முதல்வரின் நிவாரண உதவி

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே நடைபெற்ற விபத்தில் உயிரிழந்தவா்கள், காயமடைந்தவா்களுக்கு முதல்வரின் நிவாரண உதவியை நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என். நேரு ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா். திருச்சி மாவ... மேலும் பார்க்க

போதைப் பொருள்கள் விற்பனை: நிகழாண்டில் 896 வழக்குகள் பதிவு

திருச்சி மாவட்டத்தில் போதைப் பொருள்கள் விற்பனை தொடா்பாக நிகழாண்டில் இதுவரை 896 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 939 போ் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் போதைப் பொருள்கள் விற்... மேலும் பார்க்க