செய்திகள் :

லாவோஸ்: ஒரு நாளைக்கு ரூ.1,414 இருந்தால்போதும் இன்டர்நேஷனல் ட்ரிப் செல்லலாம்- சூப்பர் பட்ஜெட் ஸ்பாட்!

post image

இந்திய பயணிகளுக்கு சுற்றுலா செல்ல மலிவான வெளிநாட்டு இடங்களாக தாய்லாந்து, வியட்நாம், கம்போடியா மற்றும் இந்தோனேசியா ஆகியவைக் கருதப்படுகின்றன. சமீபத்திய அறிக்கைகளின்படி, லாவோஸ் மிகவும் மலிவான பயண இடமாக உருவெடுத்துள்ளது.

லாவோஸ் மலிவு விலையில் முதலிடம்

டைம் அவுட் இதழின் சமீபத்திய அறிக்கையின்படி, தென்கிழக்கு ஆசியாவில் மிகவும் மலிவான பயண இடமாக லாவோஸ் இருக்கிறது. சராசரியாக ஒரு நாளைக்கு £12 (சுமார் ரூ.1,414) இருந்தால் போதும். அதிலேயே தங்குமிடம், உணவு மற்றும் போக்குவரத்து ஆகியவற்றை அனுபவிக்க முடியும்.

டிராவல் அண்ட் டூர் வேர்ல்ட் அமைப்பின் உலகளாவிய தரவரிசையில், 2025ஆம் ஆண்டில் உலகின் மிக மலிவான பயண இடமாக லாவோஸ் இடம்பெற்றுள்ளது.

லாவோஸ் ஏன் மலிவானது?

லாவோஸில் பயணச் செலவுகள் மிகவும் குறைவாக உள்ளன. லுவாங் பிரபாங் மற்றும் வியன்டியன் போன்ற பிரபல சுற்றுலா இடங்களின் விடுதியில் தங்க ஒரு இரவுக்கு £3 (ரூ.353) முதலே கிடைக்கின்றன. வாங் வியாங்கில் இன்னும் மலிவாக £1.50 (ரூ.176) செலவில் தங்கலாம். உள்ளூர் உணவுகள் மிகவும் குறைந்த விலையில் கிடைப்பதாக கூறப்பட்டுள்ளது.

பேருந்துகள் மற்றும் மினி வேன்கள் மூலம் முக்கிய நகரங்களுக்கு செல்லும் உள்ளூர் போக்குவரத்து £4.50 (ரூ.529) க்கும் குறைவாகவே உள்ளது. ஒரு நாளைக்கு மோட்டார் பைக் வாடகை £4.70 (ரூ.553) கிடைக்கிறது.

பிரபல சுற்றுலாத் தலங்களுக்கான நுழைவுக் கட்டணங்களும் மலிவான விலையில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

லாவோஸ், பரபரப்பான சுற்றுலா மையங்களுக்கு மாறாக அமைதியான இடமாக திகழ்கிறது. இதன் இயற்கை அழகு, ஆறுகள், மலைகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் நகரத்தின் கலாசார அனுபவங்கள் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன.

வியட்நாம் மற்றும் கம்போடியாவில் ஒரு நாளைக்கு £15 (ரூ.1,768), மலேசியா மற்றும் இந்தோனேசியாவில் £19 (ரூ.2,239), தாய்லாந்தில் £24 (ரூ.2,829) செலவாகும் நிலையில், லாவோஸ் £12 என்ற மலிவு விலையில் முதலிடம் பெறுகிறது.

Sara Tendulkar: `சுற்றுலா பிரசாரத்துக்கு ரூ.1140 கோடி' - ஆஸ்திரேலியா பிராண்ட் தூதராக சச்சின் மகள்

லெஜண்டரி கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா, ஆஸ்திரேலியாவின் சர்வதேச சுற்றுலா பிரச்சாரத்திற்கானபிராண்ட் அம்பாசிட்டராக அறிவிக்கப்பட்டுள்ளார். Come and Say G'Day என்ற இந்த பிரசாரம் உலகம் ம... மேலும் பார்க்க

பாரீஸ் நகரத்தை போல சீனாவில் இருக்கும் ஓர் அடடே கிராமம்! - எதற்காக உருவாக்கப்பட்டது தெரியுமா?

சீனாவில் பாரீஸ் நகரத்தை போலவே ஒரு இடம் இருப்பது குறித்து உங்களுக்குத் தெரியுமா? சீனாவில் அமைந்துள்ள தியாண்டுசெங் கிராமம், பாரீஸின் அழகைப் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.2007ஆம் ஆண்டு தொடங... மேலும் பார்க்க

பின்லாந்து: வாத்துகளால் நெருக்கடியில் உள்ள பிரபல சுற்றுலா இடம் - பின்னணி என்ன?

ஹைட்சுபின்லாந்தின் தலைநகரமான ஹெல்சின்கியில் அமைந்துள்ள ஹைட்சு கடற்கரை பிரபலமான கடற்கரையாகும்.ஆனால் தற்போது இந்த பிரபலமான கடற்கரை ஒரு எதிர்பாராத சுற்றுச்சூழல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. ஆயிரக்கணக்கா... மேலும் பார்க்க

இந்த நகரத்தில் ”இறப்பதே சட்டவிரோதம்” - வினோத விதிக்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன தெரியுமா?

ஸ்பெயினின் கிரனாடா மாகாணத்தில் உள்ள லஞ்சரோன் என்ற சிறிய நகரத்தில், 1999ஆம் ஆண்டு முதல் மரணிப்பது "சட்டவிரோதம்" என்ற வினோதமான விதி அமலில் உள்ளது. அப்போதைய மேயர் ஜோஸ் ரூபியோ, நகரின் மயானத்தில் இடப்பற்றா... மேலும் பார்க்க

சுற்றுலா, மசாஜ் பார்லர்கள் இல்லை... தாய்லாந்தின் மிகப்பெரிய வருவாய் பற்றி தெரியுமா?

தாய்லாந்து சுற்றுலா தலங்களுக்கு பெயர்பெற்ற நாடாகும். நாட்டின் பொருளாதாரத்தில் சுற்றுலா துறை முக்கிய பங்குவகித்தாலும் விவசாயம் மற்றும் ஏற்றுமதி தான் அதிக வருமானம் தரும் ஆதராமாக உள்ளது என்பது பற்றி பலரு... மேலும் பார்க்க

பாங்காங் ஏரியின் நிறங்கள்! - சிலிர்க்க வைத்த காட்சி |திசையெலாம் பனி- 9

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க