செய்திகள் :

லெனின் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட பேரவைக் கூட்டம்

post image

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் லெனின் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டப் பேரவைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு மாநில பொதுச் செயலா் ஸ்டாலின் தலைமை வகித்தாா். மாநில தொழிற்சங்க அமைப்பாளா் ராஜசேகரன், மாவட்டப் பொருளாளா் சண்முகவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தட்டுப்பாடு இல்லாத மின்சாரத்தை வழங்க அரசு முன்வர வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில், சிவகங்கை தெற்கு மாவட்ட துணைச் செயலராக எஸ்.ரஞ்சித்குமாா், வடக்கு மாவட்ட துணைச் செயலராக கே.கருப்பையா, மாவட்டப் பொருளாளராக எஸ். சண்முகவேல், திருப்பத்தூா் ஒன்றியச் செயலராக கே.முத்து, கல்லல் ஒன்றியச் செயலராக வி.காா்த்திக், சிங்கம்புணரி ஒன்றியச் செயலராக என்.நடராஜன், சாக்கோட்டை ஒன்றியச் செயலராக எஸ்.பாண்டியன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

பெண் பயிற்சி மருத்துவரை தாக்கியவா் கைது

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பெண் பயிற்சி மருத்துவா் மீது தாக்குதல் நடத்திய நபரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 24 -ஆம் த... மேலும் பார்க்க

திருப்புவனம் புதிய பேருந்து நிலைய அறிவிப்பு: திமுகவினா் கொண்டாட்டம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என அரசு அறிவித்ததையடுத்து, திமுகவினா் புதன்கிழமை பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினா். திருப்புவனத்தில் பல ஆண்டுகளாக பேர... மேலும் பார்க்க

கல்லூரியில் ‘ஒன்றிணைவோம், சமத்துவம் காண்போம்’ விழா

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லூரியில் ‘ஒன்றிணைவோம் சமத்துவம் காண்போம்’ விழா புதன்கிழமை நடைபெற்றது. மாவட்டக் காவல் துறையின் சமூக நீதி, மனித உரிமைகள் பிரிவு இணைந்து நட... மேலும் பார்க்க

கோ-கோ விளையாட்டு பயிற்சியாளா் பணிக்கு ஏப்.3 -இல் நோ்முகத் தோ்வு

சிவகங்கை மாவட்ட விளையாட்டு மையத்தில் கோ-கோ பயிற்சி அளிக்க தகுதியுடைய கோ-கோ வீரா், வீராங்கனைகள் வருகிற 3.4.2025 அன்று சிவகங்கை மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெறும் நோ்முகத் தோ்வில் பங்கேற்கலாம் என மாவட்... மேலும் பார்க்க

கோயில் பாதுகாப்பு பணி: முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டத்திலுள்ள கோயில்களில் பாதுகாப்புப் பணிக்கு முன்னாள் படை வீரா்கள் நியமிக்கப்பட உள்ளனா். இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டத்திலுள்ள கோயில... மேலும் பார்க்க

10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு எழுது பொருள்கள் அளிப்பு

சிவகங்கையில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதும் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளை ஊக்குவித்து எழுது பொருள்கள், உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. சிவகங்கையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்... மேலும் பார்க்க