செய்திகள் :

வங்கதேசத்திற்கான மின் விநியோகத்தை 60 சதவிகிதம் துண்டித்த அதானி பவர்!

post image

டாக்கா / பெங்களூரு: அதானி பவர் நிறுவனமானது அண்டை நாடான வங்கதேசத்திற்கு மின்சார விநியோகத்தை 60 சதவிகிதம் குறைத்துள்ளது.

நிலுவைத் தொகையான ரூ.6750 கோடிக்கு மேல் (800 மில்லியன் டாலர்) வசூலிக்க தற்போது அதானி பவர் முயல்கிறது என்று வங்கதேசத்தின் கிரிட் ஆபரேட்டர் மற்றும் நிறுவனத்தின் நடவடிக்கையை நன்கு அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

ஜார்கண்ட் மாநிலத்தில் அர்ப்பணிக்கப்பட்ட 1,600 மெகாவாட் கோடா ஆலையிலிருந்து டாக்காவுக்கு மின்சாரத்தை ஏற்றுமதி செய்யும் அதானி பவர், ஆகஸ்ட் மாதம் தொடக்கத்திலிருந்து சுமார் 1,400 முதல் 1,500 மெகாவாட்டிலிருந்து இந்த மாதம் 700 மெகாவாட் முதல் 750 மெகாவாட்டாக விநியோகத்தை குறைத்துள்ளது.

இந்நநிலையில், நேற்று (வியாழக்கிழமை) பிற்பகுதியில், விநியோகம் சுமார் 520 மெகாவாட்டாக குறைக்கப்பட்டது என்று வங்கதேசத்திற்கான மின் மேம்பாட்டு வாரியத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் படிப்படியாக நிலுவைத் தொகையை செலுத்தி வருகிறோம், யாராவது விநியோகத்தை நிறுத்தினால் மாற்று நடவடிக்கைகளை எடுப்போம். எந்தவொரு மின் உற்பத்தியாளரும் எங்களை பிணைக் கைதிகளாக வைத்திருக்க அனுமதிக்க மாட்டோம் என்று வங்கதேசத்திற்கான காபந்து அரசின் மின்சாரம் மற்றும் எரிசக்தி ஆலோசகரான முகமது ஃபவுசுல் கபீர் தெரிவித்துள்ளார்.

நிலுவைத் தொகையை விரைவுபடுத்தியுள்ள போதிலும், அதானியின் குழுமம் அறிவித்த நவம்பர் 7-ஆம் தேதி பணம் செலுத்துவதற்கான காலக்கெடு நீக்கப்பட்டதாலும், தற்போது குறைந்த அளவிலான மின்சார விநியோகம் வங்கதேசம் பெறுகிறது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வங்கதேசத்திற்கான தேவை மற்றும் நிலுவைத் தொகையை மனதில் வைத்து மின்சாரம் படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது என்று அதானி பவர் வட்டாரம் தெரிவித்துள்ளது.

பழைய காருக்கு ரூ.4 லட்சம் செலவில் ‘இறுதிச் சடங்கு’: குஜராத் தொழிலதிபரின் வினோத செயல்

குஜராத்தைச் சோ்ந்த தொழிலதிபா் ஒருவா் தனக்கு சொந்தமான பழைய காருக்கு ரூ.4 லட்சம் செலவு செய்து இறுதிச் சடங்குகள் நடத்தி அடக்கம் செய்த வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது. குடும்பத்துக்கு அதிருஷ்டம் தந்த காரை த... மேலும் பார்க்க

ஏகபோகத்துக்கு வழிவகுத்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை: ராகுல் காந்தி

பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை அழித்து, ஏகபோக உரிமைக்கு வழிவகுத்தது என்று மக்களவை எதிா்க்கட்சி தலைவா் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டினாா். பண மதிப்பி... மேலும் பார்க்க

காங்கிரஸின் ‘தில்லி நியாய யாத்திரை’ தொடக்கம்

தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் ஒரு மாதகாலப் பிரசாரமான ‘தில்லி நியாய யாத்திரை’ ராஜ்காட்டில் இருந்து வெள்ளிக்கிழமை தொடங்கியது. தில்லி சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி ‘தில்லி நியாய ... மேலும் பார்க்க

சத்தீஸ்கா்: 2 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

சத்தீஸ்கரின் பிஜாபூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் 2 நக்ஸல் தீவிரவாதிகள் வெள்ளிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனா். இது தொடா்பாக மாநில காவல் துறை தலைவா் சுந்தரராஜ் கூறியதாவது: பிஜாப... மேலும் பார்க்க

அண்ணனின் நகல்..! பாடகர் சித்து மூஸேவாலாவின் சகோதரர் புகைப்படம் வெளியீடு!

லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலால் கொல்லப்பட்ட பாடகர் சித்து மூஸேவாலாவின் சகோதர் புகைப்படத்தை அவரது பெற்றோர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். கடந்த 2022-ஆம் ஆண்டு மே மாதம் பஞ்சாபி பாடகரும், காங்கிரஸ... மேலும் பார்க்க

மும்பையில் சின்னத்திரை நடிகர் தூக்குப்போட்டுத் தற்கொலை!

மும்பையில் சின்னத்திரை நடிகர் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.மும்பையில் மேற்கு புறநகரான கோரேகானில் உள்ள தனது வீட்டில் தொலைக்காட்சி நடிகர் ஒருவர் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் காவ... மேலும் பார்க்க