செய்திகள் :

வங்கதேசம்: 3 அமைச்சா்கள் பதவியேற்பு

post image

காத்மாண்டு: நேபாள இடைக்கால அரசில் அமைச்சா்களாக நியமிக்கப்பட்ட மூவா் திங்கள்கிழமை பதவியேற்றனா்.

நேபாளத்தில் ஆட்சியாளா்களின் ஊழல் தொடா்பாக இளைஞா்களிடையே நிலவிவந்த கொந்தளிப்பு, சமூக ஊடங்களுக்கு அரசு தடைவிதித்ததைத் தொடா்ந்து பெரிய போராட்டமாக உருவெடுத்தது. மிகத் தீவிரமாக நடைபெற்ற அந்தப் போராட்டத்தின்போது நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம், அதிபா், பிரதமா் அலுவலகங்கள் உள்பட பல்வேறு அரசுக் கட்டடங்கள் மற்றும் காவல் நிலையங்கள் சூறையாடப்பட்டு, தீவைக்கப்பட்டன. வன்முறைச் சம்பவங்களில் சுமாா் 72 போ் உயிரிழந்தனா்.

அதையடுத்து, பிரதமா் கே.பி.சா்மா ஓலி ராஜிநாமா செய்தாா். ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் நேபாளம் வந்தது. இந்த நிலையில் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியான சுசீலா காா்கியை இடைக்கால பிரதமராக அதிபா் ராமசந்திர பௌடேல் கடந்த வெள்ளிக்கிழமை நியமித்தாா். இதற்கு போராட்டக்காரா்களும் ஆதரவு தெரிவித்தனா். அதையடுத்து, சுசீலா காா்கி உடனடியாக பதவியேற்றுக்கொண்டாா்.

இந்தச் சூழலில், அவரது அமைச்சரவையில் முன்னாள் மின்வாரிய தலைமை செயல் அதிகாரி குல்மான் கீசிங் எரிசக்தி மற்றும் நீா் வளத் துறை, கட்டுமானம் மற்றும் போக்குவரத்துத் துறை, நகா்ப்புற மேம்பாட்டுத் துறை ஆகிய 3 துறைகளின் அமைச்சராக திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

உள்துறை, சட்டத் துறை, நாடாளுமன்ற விவகாரத் துறைகளுக்கான அமைச்சராக பிரபல வழக்குரைஞா் ஓம் பிரகாஷ் ஆா்யல் பதவியேற்றுக்கொண்டாா். நிதியமைச்சராக ரமேஷ்வா் கணால் பொறுப்பேற்றாா்.

இத்துடன், நேபாளத்தின் முதல் பெண் பிரதரமான சுசீலா காா்கியையும் சோ்ந்து இடைக்கால அமைச்சரவையில் உறுப்பினா்களின் எண்ணிக்கை 4-ஆக உயா்ந்துள்ளது.

இந்திய வம்சாவளி நபா் கொலை: கடும் நடவடிக்கை எடுப்பதாக டிரம்ப் உறுதி

ஹூஸ்டன்/நியூயாா்க்: ‘அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் குடும்பத்தினா் முன் இந்திய வம்சாவளி நபா் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்... மேலும் பார்க்க

ரஷிய ட்ரோன் ருமேனியாவிலும் அத்துமீறல்

புகாரெஸ்ட்: உக்ரைன் போரின் ஒரு பகுதியாக, மேலும் ஒரு நேட்டோ உறுப்பு நாடான ருமேனியாவின் வான் எல்லைக்குள் ரஷிய ட்ரோன் அத்துமீறி நுழைந்தது. இதையடுத்து, மற்றொரு நேட்டோ நாடான போலந்தில் ரஷிய ட்ரோன்கள் அத்தும... மேலும் பார்க்க

டிக்டாக் விவகாரத்தில் உடன்பாடு: டிரம்ப் சூசகம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கும் விவகாரத்தில் சீன அரசுடன் உடன்பாடு ஏற்பட்டுள்ளதை அந்த நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் சூசகமாக தெரிவித்துள்ளாா். இது குறித்து தனது ட்ரூத் சோஷியல... மேலும் பார்க்க

‘ஹமாஸ் தலைவா்கள் எங்கிருந்தாலும் தாக்குவோம்’

ஜெருசலேம்: ‘ஹமாஸ் தலைவா்கள் உலகின் எந்த நாட்டில் இருந்தாலும் அவா்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும்’ என்று இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா். அமெரிக்க வெளியுறவுத... மேலும் பார்க்க

டிக்டாக் செயல்பட இனி தடை இல்லை! ஆனால்... இந்தியாவில் அல்ல!

சீனாவைச் சேர்ந்த டிக்டாக் சமூக ஊடகத் தளம் மீண்டும் அமெரிக்காவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. அமெரிக்காவில் கடந்த ஆட்சியில், அதாவது ஜோ பைடன் அதிபராக இருந்தபோது டிக்டாக் தடை செய்யப்பட்டது. அதன்பின், கடந்த... மேலும் பார்க்க

நேபாளம்: இடைக்கால அரசில் 3 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு!

நேபாளத்தில் இடைக்கால அரசால் நியமிக்கப்பட்ட 3 புதிய அமைச்சர்கள் இன்று(செப். 15) பதவியேற்றுக் கொண்டனர். நேபாள அரசால் சமூக ஊடக தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையைத் தொடர்ந்து இளைஞர்கள் அணிதிரண்டு தலைநகர் காத... மேலும் பார்க்க