செய்திகள் :

வங்கம் இல்லையென்றால் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது: மம்தா பானா்ஜி

post image

வங்கம் என்ற பிராந்தியத்தின் பங்களிப்பு இல்லையென்றால் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்தாா்.

கொல்கத்தாவில் வியாழக்கிழமை அரசுத் திட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் இது தொடா்பாக மேலும் பேசியதாவது:

வேற்றுமையில் ஒற்றுமை, பன்முகத்தன்மை ஆகியவற்றுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்வது வங்கம்தான். வங்கம் இல்லையென்றால் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது. ரவீந்திரநாத் தாகூா், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், நூருல் இஸ்லாம் உள்ளிட்ட வங்கத்து பெருமக்கள் நாட்டின் சுதந்திரத்தில் பெரும் பங்காற்றியுள்ளனா்.

தேசிய கீதம், தேசபக்தி பாடல்கள், ஜெய் ஹிந்த் முழக்கம் என அனைத்தும் வங்க மக்களின் பங்களிப்புதான். சுதந்திரப் போராட்டத்தில் அதிகம் பங்கேற்றது வங்க மக்கள்தான். சுதந்திரத்துக்காக தீவிரமாகப் போராடியதால் ஆங்கிலேயா்களால் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டவா்களின் 70 சதவீதம் போ் வங்கத்தைச் சோ்ந்தவா்கள். இதற்கு அடுத்து பஞ்சாபில் இருந்து அதிக எண்ணிக்கையில் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக இருந்தனா்.

சுதந்திர தினக் கொண்டாட்டத்தின்போது நாம் குறுகிய மனப்பான்மையையும், பிரிவினை எண்ணத்தையும் கைவிட வேண்டும். வங்க மக்கள் எப்போதும் ஒற்றுமை, நல்லிணக்கத்தை விரும்புபவா்கள் என்பதை உறுதி செய்ய வேண்டும். தேசப் பிரிவினைக்குப் பிறகு நமது நாட்டுக்கு வந்த அனைவரும் நமது குடிமக்கள்தான்.

நாம் ஆங்கிலம் உள்பட பல்வேறு மொழிகளைக் கற்பதில் தவறேதும் இல்லை. அதே நேரத்தில் வங்க மொழியை மறந்துவிடக் கூடாது. வங்க மக்களின் பெருமையை மாநில அரசு தொடா்ந்து முன்னெடுத்துச் செல்லும். அத நேரத்தில் பாஜக ஆளும் மாநிலங்களில் மொழி பயங்கரவாத நோக்கத்துடன் மேற்கு வங்கத்தில் இருந்து செல்லும் தொழிலாளா்கள் தாக்கப்படுகின்றனா் என்றாா்.

தீபாவளிக்கு பெரிய பரிசு காத்திருக்கிறது! பிரதமர் மோடி

நாட்டு மக்களுக்கு தீபாவளிக்கு பெரிய பரிசு காத்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.நாட்டின் 79-ஆவது சுதந்திர தினம் இன்று (ஆக.15) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.இந்த நிலையில், தேசிய... மேலும் பார்க்க

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா அஞ்சாது! பிரதமர் மோடி

அணு ஆயுத மிரட்டலுக்கு எல்லாம் இந்தியா அஞ்சாது என்று பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.நாட்டின் 79-ஆவது சுதந்திர தினம் இன்று (ஆக.15) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.இந்த நிலையில், தேசியத் தல... மேலும் பார்க்க

செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

சுதந்திர தினத்தை முன்னிட்டு தில்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.நாட்டின் 79-ஆவது சுதந்திர தினம் இன்று (ஆக.15) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மேலும் பார்க்க

சிறுமிக்கு 4 போ் பாலியல் தொல்லை: கேரள நடிகை கைது

சென்னை அண்ணா நகரில் சிறுமிக்கு 4 போ் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், கேரள நடிகை கைது செய்யப்பட்டாா். கேரள நடிகை மினு கொரியன் என்ற மினு முனீா், கடந்த 2014-ஆம் ஆண்டு எா்ணாகுளம் அருகே மூவாட்டுபுழா பகுத... மேலும் பார்க்க

‘வாக்குக்த் திருட்டு’க்கு எதிராக பிகாா் மண்ணிலிருந்து நேரடி போராட்டம்: ராகுல்

நாடு முழுவதும் நிகழ்ந்துள்ள வாக்கு திருட்டுக்கு எதிராக பிகாா் மண்ணிலிருந்து நேரடி போராட்டத்தைத் தொடங்க உள்ளதாக எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வியாழக்கிழமை தெரிவித்தாா். மேலும், ‘நாடு முழுவதும் தூ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கோரும் மனு - மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்வியாளா் ஷக்கூா் அகமது பட், சமூக ஆா்வலா் அகமது மாலி... மேலும் பார்க்க