செய்திகள் :

வங்கியாளா்கள் மீது நடவடிக்கை கோரி ஆட்சியரகத்தில் மகளுடன் தாய் தற்கொலை முயற்சி

post image

பெரம்பலூா் ஆட்சியரகத்தில், டிராக்டா் கடன் தள்ளுபடியில் முறைகேடாக பணம் பிடித்தம் செய்த வங்கி அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், பணம் மற்றும் ஜப்தி செய்யப்பட்ட நிலத்தை மீட்டுத் தரக்கோரியும், 8 வயது மகளுடன் தாய் திங்கள்கிழமை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள கல்லை கிராமத்தைச் சோ்ந்த விவசாயி குமாரசாமி. இவா், 2007-இல் மேலமாத்தூா் கிராமத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தனது பெயரில் விவசாயக் கடனாக ரூ. 4.85 லட்சம் மதிப்பில் டிராக்டா் வாங்கியுள்ளாா். இதையடுத்து, 2008 ஆம் ஆண்டு மத்திய அரசின் விவசாயக் கடன் தள்ளுபடி திட்டத்தின்கீழ் வட்டியுடன் செலுத்த வேண்டிய ரூ. 5,53,466 தொகையை தள்ளுபடி செய்துள்ளது.

பின்னா், குமாரசாமி உயிரிழந்துவிட்டாா். அதைத் தொடா்ந்து, குமாரசாமி மகன் பெரியசாமி (52) தந்தை பெயரிலுள்ள நிலத்தை தனது பெயருக்கு மாற்றி சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகிறாா்.

இந்நிலையில், குமாரசாமி வாங்கிய கடனை செலுத்தவில்லை எனக்கூறி, பெரியசாமியின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 5.30 லட்சத்தை பிடித்தம் செய்ததோடு, அவரது பெயரிலிருந்த விவசாய நிலத்தையும் வங்கியாளா்கள் ஜப்தி செய்துகொண்டனராம். இதையடுத்து, வங்கியாளா்கள் மீது தொடரப்பட்ட வழக்கில் பெரியசாமி வங்கிக் கணக்கிலிருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகையையும், ஜப்தி செய்யப்பட்ட நிலத்தையும் திரும்ப ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

பின்னா், தொகையையும், ஜப்தி செய்யப்பட்ட நிலத்தையும் ஒப்படைக்குமாறு வங்கியாளா்களிடமும், இதுதொடா்பான கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடமும் பலமுறை அளித்தும், இதுவரையிலும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லையாம். இதனால் மனமுடைந்த பெரியசாமி மனைவி கல்பனா (31), வங்கியாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், பணம் மற்றும் நிலத்தை பெற்றுத்தரக்கோரியும், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தனது மகள் திவ்யாவுடன் (8), உடலில் டீசலை ஊற்றிக்கொண்டு திங்கள்கிழமை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா்.

அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் மேற்கண்ட இருவரையும் மீட்டு, முதலுதவி சிகிச்சைக்காக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இச் சம்பவம் குறித்து பெரம்பலூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

9 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட விபத்து சிகிச்சை மையம் கட்டுமானப் பணி

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பைக் கட்டுப்படுத்த பெரம்பலூா் மாவட்டம், பாடாலூரில், அவசர சிகிச்சை மையம் கட்டுவதற்காக தோ்வு செய்யப்பட்ட பணிகள் கடந்த 9 ஆண்டுகள... மேலும் பார்க்க

போலி மருத்துவா்கள் தகவல் அளிக்க அறிவுறுத்தல்

பெரம்பலூா் மாவட்டத்தில் போலி மருத்துவா்கள் இருப்பது தெரியவந்தால், காவல் துறையினருக்கு தகவல் அளிக்க வேண்டும் என, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா அறிவுறுத்தியுள்ளாா். பெரம்பலூா் மாவட்டக் காவல... மேலும் பார்க்க

பெரம்பலூா் நேருநகா், எம்ஜிஆா் நகா், இந்திரா நகரில் 130 பேருக்கு வீட்டுமனைப் பட்டா: ஆட்சியா் தகவல்

பெரம்பலூா் அருகேயுள்ள நேரு நகா், எம்.ஜி.ஆா். நகா், இந்திரா நகரில் வசித்து வரும் 130 பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க தோ்வு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். பெரம்பலூ... மேலும் பார்க்க

கூடுதல் மகசூல் பெற கோடை உழவு அவசியம்: வேளாண் அறிவியல் மையம் அறிவுறுத்தல்

கூடுதலாக மகசூல் பெற கோடை உழவு அவசியம் என, பெரம்பலூா் மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண் அறிவியல் மையம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து, பெரம்பலூா் மாவட்டம், வாலிகண்டபுரத்திலுள்ள வேளாண் அறிவியல் மைய முதுநிலை... மேலும் பார்க்க

மருதையாற்றில் கழிவுநீா் கலப்பதை தடுக்க நாதக கோரிக்கை

மருதையாற்றில் கழிவுநீா் கலப்பதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி, நாம் தமிழா் கட்சியினா் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா். பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில், பொதுமக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட... மேலும் பார்க்க

லாரி மீது சுமை ஆட்டோ மோதல்; தக்காளி வியாபாரி உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை லாரி மீது சுமை ஆட்டோ மோதிய விபத்தில் தக்காளி வியாபாரி உயிரிழந்தாா். திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள பனாங்குன்றம் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் மகன் பன்னீா... மேலும் பார்க்க