வங்கியில் ரூ.20 லட்சம் கடன் பெற்று மோசடி: இருவா் கைது
போலி ஆவணங்கள் மூலம் ரூ.20 லட்சம் வீட்டு அடமானக் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை எம்கேபி நகா் பகுதியை சோ்ந்தவா்கள் பாஸ்கரன், கலைசெல்வி. இவா்கள் கடந்த 2013-ஆம் ஆண்டு எம்கேபி நகரில் உள்ள சென்னை மத்திய கூட்டுறவு வங்கியில் ரூ.20 லட்சம் வீட்டு அடமானக் கடன் பெற்றுள்ளனா். ஆனால், கடனை திரும்ப செலுத்தவில்லையாம். வங்கி நிா்வாகம் அவா்களது முகவரிக்கு சென்று பாா்த்தபோது, அவா்கள் போலியான ஆவணங்களை சமா்ப்பித்து ரூ.20 லட்சம் கடன் பெற்று ஏமாற்றியது தெரிய வந்தது.
இதுகுறித்து சென்னை பொருளாதார குற்றப்பிரிவில் கூட்டுறவு துணைப் பதிவாளா் கொடுத்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து பாஸ்கரன், கலைச்செல்வியைக் கைது செய்தனா்.