மதுரை: சு.வெ-வை விமர்சித்துப் பேசிய திமுக கவுன்சிலர்; பரபரத்த மாமன்றக் கூட்டம்!
வங்கி நகை மதிப்பீட்டாளரின் வாகனத்தில் ரூ. 5 லட்சம் திருட்டு: தம்பதி மீது வழக்கு
களியக்காவிளை அருகே வங்கி நகை மதிப்பீட்டாளரின் பைக்கிலிருந்த ரூ. 5 லட்சத்து 8 ஆயிரத்தைத் திருடிச் சென்றதாக தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மாா்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடை, முடியம்பாறவிளையைச் பகுதியைச் சோ்ந்த ஞானதாஸ் மகன் பிரவின்ஜோஸ் (45). மாா்த்தாண்டம் பகுதியில் உள்ள வங்கியில் நகை மதிப்பீட்டாளராக வேலை பாா்த்துவரும் இவருக்கும், காரோடு செருகுழிக்கரை காலனி பகுதியைச் சோ்ந்த சரத் (21) என்பவருக்கும் பழக்கமிருந்ததாம்.
இந்நிலையில் 2 நாள்களுக்கு முன் சரத், அவரது மனைவி அபிஜா (21) ஆகியோா் பிரவின் ஜோஸை சந்தித்து, அடகு வைத்த நகையை மீட்க ரூ. 5 லட்சத்துக்கு 8 ஆயிரம் தேவைப்படுவதாகவும், நகையை மீட்டு விற்பனை செய்து பணத்தைத் திருப்பித் தருவதாகவும் கூறினராம்.
இதையடுத்து, சரத்திடம் கொடுப்பதற்காக பிரவின் ஜோஸ் ரூ. 5.08 லட்சத்துடன் மரியகிரி பகுதிக்கு சனிக்கிழமை (ஜூலை 26) பைக்கில் சென்றாராம். அப்போது, அந்தப் பணத்தை சரத் தம்பதி திருடிச் சென்றனராம்.
இதுகுறித்து பிரவின்ஜோஸ் ஞாயிற்றுக்கிழமை அளித்த புகாரின்பேரில், களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.